வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீதான நம்பிக்கை குறைந்து வருவதால், தேர்தல்களில் இனி வாக்குச் சீட்டு முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட 16 எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், திமுக, ஆம்ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் தேர்தல் ஆணைய அதிகாரிகளை நேரில் சந்தித்து இந்தக் கருத்தை வலியுறுத்தினர். இதன்பின் பேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் கபில்சிபல், திமுக எம்பி திருச்சி சிவா ஆகியோர், வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என தேர்தல் ஆணைய அதிகாரிகளை கேட்டுக்கொண்டதாகத் தெரிவித்தனர்.