“ரஃபேல் குறித்து எதுவும் பேசவில்லை” - ராகுல் சந்திப்பு குறித்து பாரிக்கர்

“ரஃபேல் குறித்து எதுவும் பேசவில்லை” - ராகுல் சந்திப்பு குறித்து பாரிக்கர்
“ரஃபேல் குறித்து எதுவும் பேசவில்லை” - ராகுல் சந்திப்பு குறித்து பாரிக்கர்
Published on

தன்னை சந்தித்த போது ரஃபேல் தொடர்பாக ராகுல்காந்தி எதுவும் பேசவில்லை என்று மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார். 

ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி  தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இது தொடர்பான ரகசிய ஆவணங்கள் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சரான மனோகர் பாரிக்கரிடம் இருப்பதாக தெரிவித்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி கோவாவில் ஓய்வு எடுத்து வருகிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் 3 நாள் பயணமாக கோவா சென்றுள்ளார்.

இந்நிலையில், நேற்று பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் முன்னாள் இராணுவ அமைச்சராகவும் தற்போது கோவா முதலமைச்சராகவும் உள்ள மனோகர் பாரிக்கரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து நலம் விசாரித்தார். 

இதைத்தொடர்ந்து ரஃபேல் ஒப்பந்தத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த தன்னிடம் பிரதமர் மோடி எதுவுமே தெரிவிக்கவில்லை என மனோகர் பரிக்கர் கூறியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

டெல்லியில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசினார். கோவா முதல்வர் மனோகர் பரிக்கரை சந்தித்த போது அவர் தன்னிடம் இத்தகவலை கூறியதாக ராகுல் காந்தி கூறினார். இதன் மூலம் அனில் அம்பானிக்காக பிரதமர் மோடி செய்த தவறு வெளிச்சத்துக்கு வந்து விட்டதாகவும் ராகுல் தெரிவித்தார். 
இந்நிலையில், தன்னை சந்தித்த போது ரஃபேல் தொடர்பாக ராகுல்காந்தி எதுவும் பேசவில்லை என்று மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் 2 பக்க கடிதம் எழுதியுள்ளார். 

அதில், உடல்நலம் விசாரிக்கவே தன்னை வந்து சந்தித்தாக கருதினேன் எனவும் சந்திப்பின் பின்னணியில் அரசியல் காரணம் உள்ளதை எண்ணி வருந்துகிறேன் எனவும் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார். 

தங்கள் சந்திப்பு 5 நிமிடங்கள் மட்டுமே நடந்ததாகவும் அதில் ரஃபேல் குறித்தோ அல்லது அது தொடர்பாகவோ எதுவும் பேசப்படவில்லை என்றும் பரிக்கர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில் உண்மைக்கு மாறான தகவலை மலிவான அரசியல் ஆதாயங்களுக்காக ராகுல் காந்தி கூறியதாகவே தான் கருதுவதாகவும் பரிக்கர் கூறியுள்ளார். 

ரஃபேல் விமான ஒப்பந்தம் விதிமுறைப்படி நடந்ததாகவே தான் எப்போதும் கூறி வருவதாகவும் பரிக்கர் கூறியுள்ளார். மலிவான அரசியல் ஆதாயம் தேடும் நோக்கத்திலேயே தன்னை ராகுல் சந்திக்க வந்துள்ளதாகவும் இது‌தற்போது புரியவருவதாகவும் பரிக்கர் தன் கடிதத்தில் கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com