நாடாளுமன்ற தூய்மைப் பணியாளருக்கு கொரோனா - 11 பேருக்கு மருத்துவ சோதனை

நாடாளுமன்ற தூய்மைப் பணியாளருக்கு கொரோனா - 11 பேருக்கு மருத்துவ சோதனை
நாடாளுமன்ற தூய்மைப் பணியாளருக்கு கொரோனா - 11 பேருக்கு மருத்துவ சோதனை
Published on
நாடாளுமன்றத்தில் தூய்மைப் பணியாளராக வேலை செய்யும் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
நாடாளுமன்ற தூய்மைப் பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த நபர் கடந்த சில நாட்களாக அலுவலகத்திற்கு வரவில்லை என்றும் அவருக்கு காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசப் பிரச்சினைகள் இருந்தன என்றும் கூறப்படுகிறது. அதனையடுத்து அவர் டெல்லியில் உள்ள ஆர்.எம்.எல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.
 
ஆகவே இவர் மூலம் யாருக்கேனும் தொற்று பரவியிருக்குமா என்பதை அறிவதற்காக மேலும் அவரது குடும்பத்தினர் உளிட்ட 11 பேருக்கு மருத்துவ சோதனை செய்யப்பட்டுள்ளது. அவற்றின் முடிவுக்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர். 
 
 
இந்நிலையில், அந்த ஊழியர் நாடாளுமன்றத்தின் பிரதான கட்டடத்தில் பணியாற்றவில்லை என்றும், மக்களவை செயலகத்தில் பணியாற்றி வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடைநிலை ஊழியரான அவர், நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட மார்ச் 23 ஆம் தேதி முதல் பணிக்கு வராமல் வீட்டிலேயே இருந்ததாக மக்களவை செயலக அதிகாரிகள் கூறியுள்ளார். 
 
இதற்கு முன்னதாக, குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள ஒரு ஊழியரின் உறவினருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால் குடியரசுத் தலைவர் மாளிகையில் பணியாற்றும் பலரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிப்பில் உள்ளனர்.
 
 
இதனிடையே இன்றைய காலை நிலவரப்படி, இந்தியாவில் மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 18,000 ஐத் தாண்டியுள்ளது.  இறந்தவர்களின் எண்ணிக்கை 600 ஐ நெருங்க உள்ளது. டெல்லியில், மட்டும் நேற்றைய நிலவரபடி  நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 2,081 ஆக உயர்ந்துள்ளது.  78 புதிய நோயாளிகளும் மற்றும் இரண்டு இறப்புகளும் ஒரே நாளில் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com