’ஒரே நாடு ஒரே தேர்தல்’ To 'வக்ஃப் வாரியம்’ - குளிர்கால கூட்டத்தொடருக்கு காத்திருக்கும் மசோதாக்கள்!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எந்தெந்த மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்படும், நிறைவேற்றப்படும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்pt web
Published on

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20 ஆம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ தெரிவித்திருந்தார். கூட்டத்தொடருக்கு முன்னதாக நவம்பர் 24 ஆம் தேதி அனைத்துக் கட்சிக்கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த குளிர்கால கூட்டத்தொடர் 18 ஆவது மக்களவையின் மூன்றாவது கூட்டத்தொடராகும்.

இந்நிலையில்தான், எந்தெந்த மசோதாவை அரசு அறிமுகப்படுத்தும், எதை எதை நிறைவேற்றும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் விசாரணையில் இருக்கும் வஃக்பு சட்டத்திருத்த மசோதா மற்றும் ஒரேநாடு ஒரே தேர்தல் மசோதா போன்றவற்றிற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இந்த கூட்டத்தொடரில் அந்த மசோதாக்கள் முன்வைக்கப்படும் பட்சத்தில் நாடாளுமன்ற விவாதம் அனல்பறக்கும். இந்த மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் தங்களது எதிர்ப்பினை பதிவு செய்யும் என்பதும் நிச்சயம்.

நாடாளுமன்றம்
ஜார்க்கண்ட் தேர்தல் | இஸ்லாமியர்களை மோசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட பாஜவுக்கு EC நோட்டீஸ்!

பிரதமர் சொன்னது என்ன?

சமீபத்தில் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி, குஜராத்தில் உள்ள அவரது சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். அதற்குப்பின் பேசிய அவர், “வளர்ச்சியடைந்த நாடாக இந்தியாவை மாற்றவேண்டும் என்பதே தனது எண்ணம். அதற்காக ஒரே நாடு ஒரே தேர்தல் மற்றும் பொது சிவில் சட்டத்தை விரைந்து கொண்டுவரும் பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது” என தெரிவித்திருந்தார்.

ஒரேநாடு ஒரேதேர்தல் திட்டத்தின் பலன்களில் மிகமுக்கியமானதாக கூறப்படுவது தேர்தல் செலவு குறையும் என்பது. அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் செலவுகள் குறையும், தலைவர்களும் தனித்தனியாக பரப்புரையில் ஈடுபடவேண்டிய சூழல் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரங்களில் நிறுத்தி வைக்கப்படும் மக்களுக்கான பல சேவைகள் தடைபடாது என ஆளும் தரப்பு கூறுகிறது.

ஒரே நாடு; ஒரே தேர்தல்
ஒரே நாடு; ஒரே தேர்தல்முகநூல்

எதிர்க்கட்சியினர் தரப்பில் இருந்து இந்த திட்டம் பெரும்பாலும் தேசிய கட்சிகளுக்கே அதிக பலன் தரும் என விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டால் வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் பணியாளர்கள் பற்றாக்குறை போன்ற சிக்கல்கள் ஏற்படும் என எதிர்தரப்பும் விமர்சனங்களை அடுக்குகிறது.

நாடாளுமன்றம்
’OPSக்கு துரோகம் செய்தது யார்?’ அதிமுகவில் உட்கட்சிப் பூசல்.. மேடையில் வெளுத்த முன்னாள் அமைச்சர்கள்!

வஃக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா

அடுத்ததாக வஃக்பு வாரிய சட்டத்திருத்தம். ஆகஸ்ட் 8 அன்று வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை ஆய்வு செய்வதற்காக 31 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழுவும் அமைக்கப்பட்டது. பாதுகாப்புத்துறை, ரயில்வேக்கு அடுத்தபடியாக அதிகமான சொத்துக்களை வைத்துள்ளதாக கூறப்படும் வக்ஃபு வாரியத்தில் செயல்திறனை மேம்படுத்தவும், வாரியம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதும் அவசியம் என கருதி மத்திய அரசு இந்த மசோதாவை கொண்டு வந்தது. புதிய விதிமுறைகள் பலவும் இதில் சேர்க்கப்பட்டிருந்தது. ஆனால், இஸ்லாமியர்களிடம் இருந்து நிலத்தை அபகரிப்பதற்கு இந்த சட்டத்திருத்தங்களை பாஜக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகிறது. இதுதொடர்பான விவாதங்களும் அரசியல் களத்தை சூடாக்கும்.

ஜகதாம்பிகா பால், நாடாளுமன்ற கூட்டுக்குழு தலைவர்
ஜகதாம்பிகா பால், நாடாளுமன்ற கூட்டுக்குழு தலைவர்

PRS தளத்தின்படி 30 சட்டங்கள் நிலுவையில் உள்ளன. வங்கிச் சட்டங்கள் திருத்த மசோதா 2024, ரயில்வே திருத்த மசோதா 2024, எண்ணெய் வயல்களின் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) திருத்த மசோதா 2024, பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா 2024 உள்ளிட்ட 30 மசோதாக்கள் நிலுவையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. காப்பீட்டு சேவைகள் துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் மசோதாவையும் மத்திய பாஜக அரசு கொண்டுவர உள்ளது.

இதனிடையே, மணிப்பூர் விவகாரம், பணவீக்கம் உள்ளிட்ட விவகாரங்களை எதிர்க்கட்சிகள் கையிலெடுக்க திட்டமிட்டுள்ளன.

நாடாளுமன்றம்
அதிரடி காட்டிய தேர்தல் ஆணையம்.. தேர்தல் களத்தில் நடந்த ’சோதனை’ வேட்டை - ரூ.1000 கோடி சிக்கியதா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com