“எம்.பி தேர்தலில் ட்விட்டர் ஒத்துழைக்க வேண்டும்” - இந்திய நாடாளுமன்றக் குழு

“எம்.பி தேர்தலில் ட்விட்டர் ஒத்துழைக்க வேண்டும்” - இந்திய நாடாளுமன்றக் குழு
“எம்.பி தேர்தலில் ட்விட்டர் ஒத்துழைக்க வேண்டும்” - இந்திய நாடாளுமன்றக் குழு
Published on

நாடாளுமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையத்திற்கு தேவையான ஒத்துழைப்பை ட்விட்டர் வழங்க வேண்டும் என்றும் ‌ட்விட்டரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்தலில் போது, வெளிநாடுகளில் இருந்து எவ்வித தாக்கமும் இல்லாமல் இருப்பதை ட்விட்டர் உறுதி செய்ய வேண்டுமென நாடாளுமன்றக் குழு சார்பில் வலியுறு‌த்தப்பட்டுள்ளது. தகவல் தொழி‌ல் நு‌ட்பத்துக்கான நா‌டாளுமன்ற நிலைக்குழுவின் தலைவர் அனுராக் தாக்கூர் இதை ட்விட்டர் ‌நிறுவனத்தின் பொதுக் கொள்கை பிரிவு தலைவர் காலின் குரோவிலிடம் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணையில் ஆஜராக ட்விட்டர் தலைவர் ‌ஜாக் டோர்சிக்கு விலக்கு அளிப்பதாகவும், அனுராக் தாக்கூர் தெரிவித்தார். 

நாடாளுமன்ற நிலைக்குழு கேட்ட 10 கேள்விகளுக்கு இன்னும் ட்விட்டர் பதில் தராத நிலையில், இன்னும் 10 நாட்களுக்குள் பதில்களை எழுத்துப்பூர்வமாக தர நிலைக்குழு உத்தரவிட்டுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தின் செயல்பாடுகள் ஒருதலைபட்சம‌க இருப்பதாக கூறி‌ புகார்கள் எழுந்த நிலையில், அது குறித்து விசாரிக்க ட்விட்டர் தலைவர் ஆஜராக வேண்டுமெனவும் நாடாளுமன்ற நிலைக்குழு உத்தரவிட்டிருந்தது. ஆனால், ட்விட்டர் தலைவர் ஆஜராவது தாமதமான நிலையில், தற்போது அதில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் ஃபேஸ்புக், வா‌ட்ஸ்சப் மூத்த அதி‌காரிகளும் வரும் 6ம் தேதி தங்கள் முன் ஆஜராக நாடாளுமன்ற குழு அறிவுறுத்தியுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com