திருட்டு, கொள்ளையில் ஈடுபட குழந்தைகளுக்கு ஒரு வருட படிப்பு.. பயிற்சியாளர்களை பெற்றோரே தேடும் அவலம்..

குற்றச்செயல்களில் ஈடுபட, லட்சக்கணக்கில் செலவிட்டு குழந்தைகளை ஒரு வருடம் பயிற்சிக்கு அனுப்பிவைக்கும் பெற்றோர்கள் இந்தியாவில் உண்டு என்றால் நம்ப முடிகிறதா? ஆம், அப்படியும் சிலர் உள்ளனர். எங்கே? ஏன் அப்படி செய்கிறார்கள்? விரிவாக பார்ப்போம்
மாதிரிப்படம்
மாதிரிப்படம்pt web
Published on

குற்றச் செயல்களில் ஈடுபட பயிற்சி

நமது ஊர்களில், குழந்தைகளை முதற்கட்டமாக பள்ளிகளுக்குத்தான் அனுப்புவார்கள். சில பெற்றோர்கள் குழந்தைகளை விளையாட்டுப் பயிற்சிகளுக்கு அனுப்பலாம். நகரங்களில் இருக்கும் பெற்றோர்கள், பொருளாதார ரீதியாக வசதியாக உள்ள பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பாடல், நடனம் இன்னும் கலைப் பயிற்சிகளில் தேர்ச்சி பெறுவதற்காக அனுப்பலாம்.

ஆனால், குற்றச்செயல்களில் திறமையாக (!?) ஈடுபட குழந்தைகளை ஒரு வருட காலத்திற்கு பயிற்சிக்கு அனுப்பிய பெற்றோர்களை பார்த்திருக்கிறீர்களா? ஆம், அப்படியும் பெற்றோர் உள்ளனர். அவர்களும் இந்தியாவில்தான் உள்ளனர். ஆனால் நமது ஊரில் அல்ல.. மத்தியப் பிரதேசத்தில்...

மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகரான போபாலில் இருந்து தொலை தூரத்தில் அமைந்துள்ள 3 கிராமங்களில், பெற்றோர்களே தங்களது குழந்தைகளை குற்றவாளிகளாக மாற்றுவதற்கு பயிற்சி அளிக்கும் கும்பலிடம் கொண்டு சேர்க்கின்றனர். இதை கேட்கும்போது நமக்கு கோபம் வருகிறது இல்லையா?

மாதிரிப்படம்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் | ‘மைக்கேல் மதன காமராஜன்’ நாகேஷ்!

நகைகளைப் பார்த்தே மதிப்பிடும் திறன்

போபாலில் இருந்து 117 கிமீ தொலைவில் அமைந்துள்ளது ஹல்கேடி, குல்கேடி, காடியா எனும் 3 கிராமங்கள். இந்த கிராமங்களில் பல்வேறு கும்பல்கள் பதின்பருவ குழந்தைகளுக்கு குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கான பயிற்சியை அளிக்கின்றன. எனவே, இந்த 3 கிராமங்களைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் தங்களது குழந்தைகளை இந்த கும்பல்களிடம் கொண்டு சேர்க்கின்றனர். அதிலும், யார் சிறந்த பயிற்சி அளிக்கிறார்களோ அவர்களிடம் பெற்றோர் சேர்ப்பதாகவும் கூறப்படுகிறது.

இங்கு பயிலும் குழந்தைகளுக்கு நெரிசலான இடங்களில் மக்களிடம் பைகளைப் பிடுங்கிக் கொண்டு ஓடுதல், பிக்பாக்கெட் அடித்தல், போலீஸிடம் மாட்டிக் கொள்ளாமல் தப்பிப்பது, ஒருவேளை மாட்டிக்கொண்டால் அடிகளை எப்படித் தாங்குவது என இன்னும் பல பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. குறிப்பாக, நகைகளைப் பார்த்ததும் அதன் மதிப்பை மதிப்பிடும் திறனும் குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கப்படுகிறது. இந்த பயிற்சிகளுக்கும் கட்டணம் அவசியமாம். தங்களது குழந்தைகள் குற்றம் செய்வதற்கான பட்டதாரி ஆவதற்கு (!) கட்டணமாக ரூ.2 முதல் ரூ.3 லட்சம் வரை செலுத்துகிறார்கள்.

மாதிரிப்படம்
விஜய் கொடியின் வரலாறு இதுதான்... வெளியான பிரத்யேக தகவல்கள்!

காது கேளாதவர்களாக நடிக்கும் பெண்கள்

ஒரு வருடம் பயிற்சி நிறைவடைந்ததும் கும்பல், பெற்றோருக்கு ஆண்டுதோறும் ரூ.3 முதல் ரூ.5 லட்சம் வரை கொடுக்கின்றனர். இப்படி உருவாக்கப்பட்ட குற்றவாளிகளின் கைவரிசைகள் இந்தியா முழுவதும் தலைப்புச் செய்திகள் ஆகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது இந்த கிராமங்களில் பயிற்சி பெற்ற 2000க்கும் மேற்பட்ட நபர்கள் மேல், நாடுமுழுவதும் உள்ள காவல் நிலையங்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

காவல்துறையினர் கூட இந்த கிராமங்களை மிகுந்த எச்சரிக்கையுடனே கையாள்கின்றனர். அறிமுகமில்லாதவர்கள் அந்த கிராமங்களுக்குள் நுழைந்தால், குறிப்பாக அவர்களது கைகளில் கேமரா அல்லது செல்போன் இருந்தால் கிராம மக்கள் மிகுந்த நேர்த்தியுடன் நடந்துகொள்கிறார்களாம். இங்குள்ள பெண்கள் வெளியாட்களைப் பார்த்ததும் காது கேளாதவர்களாக நடந்து கொள்கிறார்களாம். எனவே குற்றச்செயல்களை கட்டுப்படுத்த காவல்துறை எத்தனை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் அது போதுமான அளவு இருப்பதில்லை.

மாதிரிப்படம்
பீகார்|பள்ளி பேருந்தை தீ வைக்க முயன்ற போராட்டக் கும்பல்; தவிர்க்கப்பட்ட அசம்பாவிதம்!

மத்தியப் பிரதேசம் பரப்பளவில் இந்தியாவில் இரண்டாவது பெரிய மாநிலம். மாநிலத்தின் மக்கள் தொகையில் ஆறாவது பெரிய மாநிலம். நாட்டின் மத்தியில் அமைந்திருப்பதால் இந்தியாவின் இதயம் என்று அழைக்கப்படும் மாநிலம் கூட. இதுவரை காங்கிரஸ், ஜனதா, பாஜக போன்ற கட்சிகள் ஆட்சிகளில் இருந்துள்ளன.

கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியின் கமல்நாத் ஆட்சியில் இருந்த 2 ஆண்டுகளைத் தவிர பாஜகவே ஆட்சியில் அமைந்துள்ளது. ஆனாலும், கல்வியை கடைக்கோடி வரை கொண்டு செல்லாததும், கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தாததும், மக்களது வாழ்வுக்கான அடிப்படை பொருளாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்காததே இத்தகைய இன்னல்களுக்குக் காரணம்..

இதுதொடர்பான செய்திகள் நாடு முழுவதும் பரவியுள்ள நிலையில், இனிமேலாவது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறதா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்...

மாதிரிப்படம்
கொல்கத்தா மருத்துவர் கொலை| கண்டெடுக்கப்பட்ட டைரி.. கிழிக்கப்பட்ட பக்கங்கள்.. சூடுபிடிக்கும் விசாரணை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com