சவுர்யா சக்ரா விருது பெற்றவர் கர்னல் நவ்ஜோத் சிங் பால். வெறும் 39 வயது நிரம்பிய இளம் அதிகாரி. 2 பாரா ரெஜிமெண்ட் அதாவது சிறப்புப் படைகளின் முன்னாள் கட்டளை அதிகாரியாக பணியாற்றியவர். மிகச் சிறப்பான சேவையால் பல விருதுகளைப் பெற்றவர். இவர் நீண்ட காலமாகப் புற்றுநோயால் அவதிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
ஆனால் கடந்த 9 ஆம் தேதி சிகிச்சை பலனளிக்காமல் இவர் உயிரிழந்தார். தற்சமயம் நவ்ஜோத், பெங்களூருவில் இறந்துள்ளார். ஆனால் இவரது குடும்பத்தினர் வட இந்தியாவில் வசித்து வருகின்றனர். மகனின் இறப்புச் செய்தியை அறிந்த அவரது தந்தை ராணுவத்தில் தனி விமானம் மூலம் சடலத்தைக் கொண்டு வர விண்ணப்பித்துள்ளார். தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அதிகாரிகள் செய்வதறியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஆகவே ராணுவ விமானத்தை வழங்க மறுத்துள்ளனர். ஒரு ராணுவ அதிகாரிக்கே இராணுவ விமானம் மறுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.