ஐசியூயில் அனுமதிக்கப்பட்டிருந்த பச்சிளம் குழந்தை ஒன்று எலி கடித்து இறந்ததாக புகார் எழுந்துள்ளது.
பீகார் மாரிநிலம் தர்பங்கா பகுதியை சேர்ந்த தம்பதியினர் பூரன் மற்றும் நீலம். இந்த தம்பதியினருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. பிறந்து 9 நாட்களே ஆன குழந்தையின் உடல்நிலையை கருத்தில் கொண்டு தர்பங்கா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றின் குழந்தைகளுக்கான ஐசியூவில் அக்குழந்தையை அனுமதித்துள்ளனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல குழந்தையின் உடல்நிலை சரியான மாதிரி தெரியவில்லை.
Read Also -> பிரம்மாண்டமான படேல் சிலையின் சிறப்பு என்ன ?
இதனையடுத்து தம்பதியினர் குழந்தை அனுமதிக்கப்பட்ட ஐசியூ வார்டுக்கு ஒருநாள் சென்றுள்ளனர். அதுகுறித்து அவர்கள் கூறும்போது, “ குழந்தையை பார்ப்பதற்காக ஐசியூ வார்டுக்கு சென்றபோது தான் அந்த அதிர்ச்சியை பார்த்தோம். குழந்தையின் கை, கால்களில் எலி கடித்து அதிலிருந்து ரத்தம் வந்து கொண்டுடிருந்தது. சரி உடனடியாக நர்ஸிடம் சொல்லலாம் என பார்த்தால் அங்கு பணியில் யாரும் இல்லை. முழுக்க முழுக்க மருத்துவமனையின் அலட்சியம் காரணமாக எலி கடித்து எங்கள் குழந்தை இறந்துவிட்டது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றனர்.
மருத்துவமனை நிர்வாகம் இதுகுறித்து கூறும்போது, “ எலி கடித்து குழந்தை இறக்கவில்லை. குழந்தை மூச்சுவிடாமல் மிகவும் சிரமப்பட்டிருந்தது. அதனால் எங்களால் முடிந்த அனைத்து சிகிச்சை முறைகளையும் அளித்து பார்த்தோம். ஆனால் குழந்தை இறந்துவிட்டது. குழந்தையின் பெற்றோர்கள் சொல்வதுபோல் எலி கடித்ததற்காக எந்த வடுவும் குழந்தையின் உடம்பில் இல்லை” என தெரிவித்தார்.