இரு மாநில போலீசாருக்கு இடையே மோதல்: அசாம்-மிசோரம் மாநில எல்லையில் துணை ராணுவம் நிறுத்தம்

இரு மாநில போலீசாருக்கு இடையே மோதல்: அசாம்-மிசோரம் மாநில எல்லையில் துணை ராணுவம் நிறுத்தம்
இரு மாநில போலீசாருக்கு இடையே மோதல்: அசாம்-மிசோரம் மாநில எல்லையில் துணை ராணுவம் நிறுத்தம்
Published on
அசாம், மிசோரம் மாநில எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பு துணை ராணுவப் படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அசாம், மிசோரம் மாநிலங்களுக்கு இடையே எல்லை பிரச்னை நிலவும் நிலையில் அது தொடர்பாக இரு மாநில காவல் துறையினருக்கு இடையே மோதல் மூண்டது. இதில் அசாம் மாநில காவல் துறையினர் ஐவர் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். இரு தரப்பிலும் 50க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிகளில் இரு மாநில காவல் துறையினர் வாபஸ் பெறப்பட்டு துணை ராணுவப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்கு இரு மாநில அரசுகளும் இணங்கியுள்ளன.
இதற்கிடையில் எல்லை பிரச்னை குறித்து சமரசம் செய்து வைக்க மத்திய உள்துறை அமைச்சகம் டெல்லியில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் அசாம், மிசோரம் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களும் டிஜிபிக்களும் பங்கேற்றனர்.
வட கிழக்கு மாநிலங்களுக்குள் நிலவும் எல்லை பிரச்னை தீர்க்கப்பட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிய 2 நாட்களிலேயே இரு மாநில எல்லையில் மோதல் வெடித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com