ஆந்திரா அரசின் ஆலோசகர் பதவியில் இருந்து நிர்மலா சீதாராமன் கணவர் ராஜினாமா

ஆந்திரா அரசின் ஆலோசகர் பதவியில் இருந்து நிர்மலா சீதாராமன் கணவர் ராஜினாமா
ஆந்திரா அரசின் ஆலோசகர் பதவியில் இருந்து நிர்மலா சீதாராமன் கணவர் ராஜினாமா
Published on

ஆந்திரப் பிரதேச அரசின் தகவல் தொடர்பு ஆலோசகர் பதவியில் இருந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரான பரகலா பிரபாகர் ராஜினாமா செய்துள்ளார்.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரான பரகலா பிரபாகர் ஆந்திரப் பிரதேச அரசின் தகவல் தொடர்பு ஆலோசகராக இருந்து வந்தார். இந்நிலையில் அவர் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக ஆந்திரப் பிரதேச முதலமைச்சருக்கு பரகலா பிரபாகர் கடிதம் எழுதியுள்ளார். அதில், பாஜகவிற்கு அளித்து வந்த ஆதரவை தெலுங்கு தேசம் திரும்பப் பெற்றதில் இருந்தே கடந்த சில நாட்களாக எதிர்க்கட்சிகள் தன்னை டார்கெட் செய்வதாக குறிப்பிட்டுள்ளார். மத்திய பாஜக அரசிற்கு எதிராக உள்ள தெலுங்கு தேசம் கட்சி தன்னை ஏன் இன்னும் ஆலோசகராக வைத்து உள்ளது என எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்பதாகவும் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தவறான விமர்சனத்தை முன்வைப்பதாகவும் தெரிவித்துள்ளார். நான் ஆலோசகராக இருப்பது மூலம் மத்திய அரசிற்கு நீங்கள்( சந்திரபாபு நாயுடு) எதிராகத்தான் உள்ளீர்களா என எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பதுவதாக கூறியுள்ள அவர், அதன் மூலம் மக்கள் மத்தியில் உங்களை பற்றி தவறாக சித்தரிக்க எதிர்க்கட்சிகள் முயல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பரகலா பிரபாகர் ராஜினாமா கடிதம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மாநில உணவுத்துறை அமைச்சர் சோமிரெட்டி, ராஜினாமா கடிதம் இன்றும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என தெரிவித்தார். மேலும் பேசிய அவர், ஜெகன்மோகன் ரெட்டியின் ஆதாரமற்ற விமர்சனங்களுக்கு எந்தவித மதிப்பும் இல்லை என கூறினார். ராஜினாமா செய்ய வேண்டும் என்ற முடிவிற்கு பிரபாகர் செல்லத் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மத்திய பாஜக அரசில் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருப்பவர் நிர்மலா சீதாராமன். அதேசமயம் ஆந்திரப் பிரதேசத்தில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. ஆந்திராவிற்கு சிறப்பு அஸ்தஸ்து வழங்கும் விவகாரம் தொடர்பாக மத்திய பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை தெலுங்கு தேசம் கட்சி கடந்த மார்ச் மாதம் திரும்பப் பெற்றது. இந்நிலையில் மத்திய அரசிற்கு எதிராக உள்ள ஆந்திர அரசின் ஆலோசகராக மத்திய அமைச்சரின் கணவர் தொடர்வது குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வந்தன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com