“தண்ணீர் பிரச்னைக்கு ஆயிரம் கோடி நிதி” - ஜிஎஸ்டி கூட்டத்தில் ஓபிஎஸ்

“தண்ணீர் பிரச்னைக்கு ஆயிரம் கோடி நிதி” - ஜிஎஸ்டி கூட்டத்தில் ஓபிஎஸ்

“தண்ணீர் பிரச்னைக்கு ஆயிரம் கோடி நிதி” - ஜிஎஸ்டி கூட்டத்தில் ஓபிஎஸ்
Published on

நிதியமைச்சர்கள் கூட்டத்தில் தமிழகத்தின் கோரிக்கைகள், தேவைகளை முன்வைத்தோம் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி கவுன்சிலின் 35ஆவது கூட்டம் தலைநகர் டெல்லியில் இன்று நடைபெற்றது. மத்தியில் மீண்டும் ஆட்சி அமைத்துள்ள மோடி அரசில் நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமன் தலைமையில் முதல்முறையாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில் நிதியமைச்சர்கள் கூட்டத்திற்குப் பிறகு தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நிதியமைச்சர்கள் கூட்டத்தில் தமிழகத்தின் கோரிக்கைகள்,  தேவைகளை முன்வைத்தோம். சென்னை மெட்ரோ ரயில்  திட்டத்தை விரிவுபடுத்த தேவையான நிதி ஒதுக்க வலியுறுத்தியுள்ளோம். 

விவசாய தொழிலாளர்களையும் ரூ.6000 உதவித்தொகை திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தியுள்ளோம். தமிழகத்தில் தண்ணீர் பிரச்னையை எதிர்கொள்ள ரூ.1000கோடி நிதி ஒதுக்க வேண்டும் எனக் கேட்டுள்ளோம். ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வழங்கவும் வலியுறுத்தியுள்ளோம். 

பருவமழை சரியாக பெய்யாததால் தமிழகத்தில் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான போர்க்கால நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். காவிரி கோதாவரி நதிகள் இணைப்புக்கான நிதியை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும் எனக் கோரியுள்ளோம்” எனத் தெரிவித்தார்.
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com