மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக அமைச்சர் பங்கஜா முண்டே, 22 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார்.
மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் ஊரக மேம்பாடு மற்றும் பெண்கள், குழந்தைகள் நல அமைச்சர் பங்கஜ் முண்டே, பார்லி தொகுதியில் போட்டியிட்டார். மறைந்த, பாஜக மூத்த தலைவர் கோபிநாத் முண்டே மகளான அவரை எதிர்த்து தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில், தனஞ்செய் முண்டே போட்டியிட்டார். இவர், பங்கஜ் முண்டேவின் பெரியப்பா மகன்.
வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியதில் இருந்தே தனஞ்செய் முண்டே முன்னிலையில் இருந்தார். தொடர்ந்து பின்னடைவை சந்தித்தார் பங்கஜா. இருப்பினும், 22 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியை தழுவினார். இவர் கடந்த தேர்தலில் 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இந்த தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார், பங்கஜா.