மகாராஷ்டிர மாநில பாரதிய ஜனதா கட்சியில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல் விஸ்வரூபத்தை எட்டியுள்ளது.
அண்மையில் பாஜகவின் மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே கட்சியில் இருந்து விலகியிருந்தார். இந்நிலையில் பங்கஜ முண்டேவும் பாஜகவை விட்டு விலகுவதாக சொல்லப்படுகிறது. மாநில தலைவர்களோடு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை தொடர்ந்து இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
அண்மையில் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் சரத் பவாரை பாராட்டியிருந்தார் பங்கஜ முண்டே. இருப்பினும் அவர் சிவசேனா கட்சியில் இணைவது இன்னும் உறுதியாகவில்லை எனத் தெரிகிறது. இருப்பினும் அந்த முடிவு குறித்து அவர் மவுனம் காத்து வருகிறார்.
மழைவெள்ளத்தில் ஏற்பட்ட சேதங்களுக்காக விவசாயிகளுக்கு பத்தாயிரம் கோடி ரூபாயை நிவாரண நிதியாக அறிவித்தார் முதல்வர் உத்தவ் தாக்கரே. அதற்கு அம்மாநில பாஜக அந்த நிதி போதாது என சொல்லியிருந்த நிலையில் பங்கஜ முண்டே முதல்வரின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்தருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.