உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூர் அருகே உள்ள வீட்டில் 14 ராஜநாக குட்டிகள் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அஹேர் என்ற கிராமத்தில் விவசாயி ஒருவர் வீட்டில் ராஜநாகம் ஒன்று பிடிபட்டது. கிராம மக்கள் உதவியுடன் பிடிபட்ட ராஜநாகம் அடித்துக்கொல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து மீண்டும் மற்றொரு ராஜநாகம் பிடிபட்ட நிலையில் அவ்வீட்டில் வசிப்பவர்கள் அச்சமடைந்தனர். அவ்வீட்டில் 8 பேர் வசித்து வருகின்றனர். அச்சம் காரணமாக அவர்கள் பக்கத்து வீட்டிற்கு சென்று வசிக்கின்றனர். பின்னர், அந்த விவசாயி மகுடி வாசிப்பவர்களை வரவழைத்தார்.
இதையடுத்து மகுடி சத்தம் கேட்டதில் 14 குட்டி ராஜநாகங்கள் பிடிபட்டன. அத்துடன் பாம்பு முட்டை ஓடுகளும் கிடைத்தன. பாம்புகள் பிடிப்பட்ட பின்னர்கள் அந்த விவசாயி குடும்பத்தினர் நிம்மதி அடைந்தனர். மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் அந்தக் குடும்பம் ‘ஆவாஸ் யோஜ்னா’ திட்டத்தின் மூலம் வீட்டினை பெற பலமுறை முயற்சித்தும் முடியாமல் போனதாக வருத்தம் தெரிவித்துள்ளார்கள்.