டெல்லியில் இருந்து கோவா சென்றுகொண்டிருந்த விமானத்தில், தன்னை ஒரு தீவிரவாதி என்று சொல்லி பயணிகளிடம் பீதியை ஏற்படுத்திய ஜியா உல் ஹக் என்பவர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் மனநோய்க்கான சிகிச்சையில் இருப்பவர் என்பது பின்னர் தெரியவந்துள்ளது.
கோவாவில் உள்ள டாபோலிம் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் காவல்துறையினரால்
அந்தப் பயணி கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர், டெல்லியில் உள்ள இன்ஸ்ட்டியூட் ஆப் ஹியூமன் பிஹேவியர் மருத்துவமனையில் மனநோய்க்கான சிகிச்சை பெறுபவர் எனத் தெரியவந்தது.
அந்தப் பயணி தன்னை சிறப்புப் பிரிவு காவல்துறை அதிகாரி எனக் கூறியுள்ளதுடன், இந்த விமானத்தில் ஒரு தீவிரவாதி இருக்கிறார் என்ற கூறியதும் பயணிகளில் பீதியும் பதற்றமும் ஏற்பட்டிருக்கிறது. டாபோலிம் விமான நிலையத்தில் அவர் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரிடம் பயணிகளால் ஒப்படைக்கப்பட்டார்.
விமானப் பயணிகளிடம் பீதியை ஏற்படுத்திய ஜியா உல் ஹக், மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு பனாஜியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.