“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
நாட்டில் பசுமை எரிசக்தி ஆதாரங்களில் கவனம் செலுத்த மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அமைத்திருந்த தருண் கபூர் எரிசக்தி ஆலோசனைக் குழு, தனது பரிந்துரைகளை சமர்பித்திருக்கிறது. அதில் டீசல் கார்களை இந்தியாவில் வரும் 2027ஆம் ஆண்டிற்குள் முழுமையாக தடை செய்யப்படவேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதற்குள் வாகனங்கள் பயன்படுத்தும் அனைவரையும் பெட்ரோல் அல்லது எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற்றவேண்டும் என்றும் அந்த குழு பரிந்துரை செய்துள்ளது.
மேலும், வரும் 2030ஆம் ஆண்டுக்கு பிறகு டீசல் பேருந்துகள் எதுவும் சேர்க்கப்படக்கூடாது என்றும் அனைத்து பேருந்துகளும் எலெக்ட்ரிக் பேருந்துகளாக மட்டுமே இருக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதற்காக அரசிடம் விரைவில் ஒப்புதல் பெறவும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
2070ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை சுற்றுச்சூழல் மாசு இல்லாத நாடாக உருவாக்க அரசு முடிவு செய்துள்ளது. இதை செயல்படுத்த Faster Adoption and Manufacturing of Electric Vehicles (FAME) என்ற கொள்கையை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. இந்த கொள்கையை மேலும் பல காலம் நீட்டித்து மக்களை இது போன்ற மாற்றங்களுக்கு உட்படுத்தவேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.
2024-க்குள் சரக்குகளை கையாள்வதற்கு ரயில்வே மற்றும் எரிவாயு மூலம் இயங்கும் டிரக்குகளை அதிக அளவில் பயன்படுத்தவும் அந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு இதுவரை ஏற்கவில்லை. ஆனால், அதை நோக்கிய இலக்குக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.