பான் கார்டுடன் உடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஒருவரே பல பான் கார்டுகளை வைத்துக்கொண்டு மோசடியில் ஈடுபடுவதாகவும், வருமான வரி ஏய்ப்பு, கடன் ஏய்ப்பு உள்ளிட்ட செயல்களில் ஈடுவதாகவும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசு கடந்த 2017ம் ஆண்டு சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டப்படி பான் எண்ணுடன் ஆதாரை இணைக்காவிட்டால் அவர்களின் பான் கார்டு செயல்பாட்டில் இருக்காது, அதாவது பயனற்றதாகிவிடும் என எச்சரித்து இருந்தது.
வருமான வரியை செலுத்துவதில் சிக்கல் ஏற்படாமல் இருக்க பான் கார்டு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய நேரடி வரி ஆணையம் தெரிவித்திருந்தது. இதற்காக கால அவகாசம் வழங்கி, பல முறை கால நீட்டிப்பும் செய்தது. கடைசியாக பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் மார்ச் 31, 2020 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மத்திய நேரடி வரி ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
இந்நிலையில், மார்ச் 31 ஆம் தேதி இணைக்கப்படவில்லை என்றால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதாருடன் இணைக்கப்பட்ட பின்பே வங்கி கணக்குகள் செயல்பாட்டிற்கு வரும் என்று வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இணைப்பது எப்படி?