திருப்பதி லட்டு சர்ச்சையை அடுத்து, பழனி பஞ்சாமிர்தம் நெய்யில் கலப்படம் என பரவிய தகவல்-உண்மை இதுதான்!

திருப்பதி ஏழுமலையான் கோயில், பத்மாவதி தாயார் கோயில் பிரசாதங்களின் தயாரிப்பில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதை தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஷ்யாமளாராவ் உறுதிபடுத்தியுள்ளார். ஆனால், கோவில் நெய்யில் கலப்படம் இல்லை என திண்டுக்கல் நிறுவனம் மறுத்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயில்
திருப்பதி ஏழுமலையான் கோயில்முகநூல்
Published on

திருப்பதி ஏழுமலையான் கோயில், பத்மாவதி தாயார் கோயில் பிரசாதங்களின் தயாரிப்பில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதை தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஷ்யாமளாராவ் உறுதிபடுத்தியுள்ளார். ஆனால், கோயிலுக்கு அனுப்பப்பட்ட நெய்யில் கலப்படம் இல்லை என திண்டுக்கல் நிறுவனம் மறுத்துள்ளது.

நாள்தோறும் 3 லட்சம் லட்டுகளுக்கு மேல் பிரசாதமாக வாங்கப்படும் நிலையில், திருப்பதி கோயில் பிரசாத தயாரிப்புக்கான நெய் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. ஜெகன்மோகன்ரெட்டி ஆட்சிக்காலத்தில் இந்தநெய்யில் மிருகக்கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு எழுப்பிய குற்றச்சாட்டு பெரும் பூகம்பத்தை கிளப்பியுள்ளது.

திருப்பதி லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பை சேர்த்து மகா பாவம் செய்துவிட்டார்கள் என முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதலு குற்றம்சாட்டியுள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோயில்
புனே|அதிக பணிச்சுமையால் இளம்பெண் மரணம்.. வைரலான தாயின் உருக்கமான கடிதம்! நிறுவன தலைவர் கொடுத்த பதில்

இதனை, உறுதிப்படுத்தும்வகையில் வெங்கடாஜலபதி கோயிலில் பிரசாதங்கள் தயார் செய்ய பயன்படுத்தப்பட்ட நெய்யின் தரம், லட்டுவின் தரம் குறித்து ஆய்வு செய்ய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஷ்யாமளா ராவ் தெரிவித்துள்ளார். நெய்யை சோதனை செய்ய தங்களிடம் பரிசோதனை மையம் இல்லை என்றும், வெளியில் உள்ள பரிசோதனை மையங்களிலும் ஆய்வு செய்யப்படவில்லை என்றும் கூறிய அவர், இதனை வாய்ப்பாக பயன்படுத்தி தரமற்ற நெய்யை விநியோகம் செய்துவந்ததாக ஷ்யாமளாராவ் குற்றம்சாட்டினார்.

திருப்பதி கோயிலுக்கு விநியோகிக்கப்படும் நெய்யில் மிருக கொழுப்பு இருப்பதான புகாரில், திண்டுக்கல்லில் இருந்து கடந்த ஜூன், ஜூலையில் 4 கண்டெய்னர்களில் வாங்கப்பட்ட 16 டன் நெய்யில் கலப்படம் இருப்பதாக சியாமளா ராவ் குற்றம் சாட்டினார்.

திண்டுக்கல் ஏ.ஆர் டெய்ரி ஃபுட் நிறுவனம் புகாரை மறுத்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள விளக்கத்தில், “ திருப்பதி தேவஸ்தானத்துக்கு கடந்த ஜூன், ஜூலை என இரு பாகங்களாக நெய் அனுப்பப்பட்டது. தற்போது அனுப்புவது கிடையாது. தேவஸ்தானத்துக்கு அனுப்பும் முன்பும், பின்பும் பரிசோதனை செய்யப்படுகிறது. அந்த அறிக்கைகள் உள்ளது. ” என இந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயில்
கேரளா | பாலியல் தொழிலுக்காக வங்கதேசத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட இளம்பெண்! அதிரடியாக மீட்ட போலீசார்

இந்நிலையில், ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் அனிதா தலைமையிலான அதிகாரிகள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், பழனி பஞ்சாமிர்தம் குறித்தும் தற்போது வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பழனி முருகன் கோயிலில் பஞ்சாமிர்தத்திற்கான நெய் ஆவின் நிறுவனத்திடம் இருந்து மட்டுமே பெறப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வதந்தி பரப்பிய இருவர் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகவும் கோயில் நிர்வாகம் கூறியுள்ளது.

திருப்பதி லட்டுக்கு நெய் அனுப்பிய ஏ. ஆர். ஃபுட்ஸ் நிறுவனம்தான் பழனி முருகன் கோயிலுக்கும் நெய் விநியோகம் செய்வதாக தகவல் பரவியது. இதை மறுத்துள்ள பழநி கோயில் நிர்வாகம், பக்தர்கள் மத்தியில் குழப்பமும் கொந்தளிப்பும் ஏற்படுத்தவும் மதக்கலவரத்தை தூண்டும் வகையிலும் இது போன்ற வதந்திகளை வினோஜ் செல்வம் மற்றும் செல்வகுமார் எக்ஸ் சமூக தளத்தில் பரப்பியதாக கூறியுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயில்
சென்னையில் மீண்டும் அதிர்ச்சி| சிறுவனை கடித்து குதறிய நாய்.. ’plastic surgery’ செய்யும் பரிதாப நிலை!

இருவர் மீதும் குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பழநி கோயில் நிர்வாகம் கூறியுள்ளது. முருகன் கோயிலில் பஞ்சாமிர்தம் தரமான முறையில் தயாரிக்கப்படுவதாக கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. பஞ்சாமிர்தம் அவ்வப்போது தரப்பரிசோதனை செய்யப் படுவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள வினோஜ் செல்வம், செல்வகுமார் பாஜக நிர்வாகிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com