பிரதமர் நரேந்திர மோடி சமீபத்திய தொலைகாட்சி பேட்டி ஒன்றில், தினமும் ஒருவர் பக்கோடா விற்று, வீட்டுக்கு 200 ரூபாய் கொண்டு செல்வதை வேலை வாய்ப்பு என்று எடுத்துக் கொள்ள முடியாதா என கேட்டிருந்தார்.
நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய அமித்ஷாவும் பக்கோடா விற்பது ஒன்றும் கேவலமான செயல் அல்ல என்றும் எந்த வேலைக்கும் செல்லாமல், செய்யாமல் இருப்பதைக் காட்டிலும் பக்கோடா விற்பது மேல் என்று கூறியிருந்தார். ‘பக்கோடா’ என்ற ஒற்றை சொல் போதாதா சமூக வலைதளங்களில் கடலைபோடும் நெட்டிசன்களுக்கு! பிரதமரையும், பாஜக தலைவர்களையும் கேலி செய்ய ஆரம்பித்துவிட்டனர். #பக்கோடா என்ற ஹேஷ்டேக்கில் வரைலாகும் வசனங்கள் சில...
இந்தியாவின் தேசிய உணவு #பக்கோடா என்றறிக...
டிஜிட்டல் இந்தியா ஆக்குறோம்னு சொல்லிட்டு இப்ப #பக்கோடா விக்க சொல்றாங்களே!!!
ஆக, இனிமேல் பள்ளியில் மாணவர்களுக்கு #பக்கோடா தயாரிப்பது குறித்து பாடம் நடத்தப்படும்
#பல்லு இருக்குறவன் (வேலையில் உள்ளவன்) #பக்கோடா சாப்பிடுகிறான் மொமண்ட்
அந்த #பக்கோடா தொழிலை செய்வதற்கு வங்கிகளில் எந்த பிரச்சனையும் இல்லாமல் கடன் கிடைக்க உதவி செய்தல் போதும்
#15லட்சம் கிடைக்கும் என்று நம்பி வாக்களித்தவனுக்கு கிடைத்தது #பக்கோடா மட்டும்தான்!!
'#2000_ரூபாய் நோட்ல #சிப்ஸ் இருக்கு, #500_ரூபாய் நோட்ல #பக்கோடா இருக்கு'ன்னு விதவிதமா அள்ளி விட்டீங்களேடா..? அதத்தான் தாங்க முடியல
என டையலாக்குள் போட்டு சூடாக பக்கோடாவை வருத்தெடுத்து கொண்டிருக்கின்றனர் சமூகவலைதளவாசிகள்.
#ரேஷன் கடைகளை மூடிவிட்டு #கக்கூஸ் கட்டும் மோடி கூட்டம்
வேலை கேட்டா #பக்கோடா சுட சொல்லுறாங்க...
ஒரு டீக்கடை மாஸ்டருக்குதான் தெரியும் சூடான டீ & பக்கோடா காம்பினேசன்
#பக்கோடா எங்க ஜீ போட்றானுவ... எல்லாரும் பானிப்பூரி விக்க வந்துட்றானுவ...