பப்ஜி விளையாட்டில் இந்திய இளைஞருடன் ஏற்பட்ட பழக்கத்தில் தன் 4 நான்கு குழந்தைகளுடன் இந்தியா வந்து அவரை மணந்த பெண்ணிடம் இழப்பீடு தொகை கேட்டு கணவர் நோட்டீஸ் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
2019 ஆம் ஆண்டு மலர்ந்த காதல் கதை இன்றளவும் மறையாமல் பல திருப்பங்களை உடையதாக சமூக வலைதளத்தில் வலம் வந்து கொண்டுள்ளது. அது என்னவென்றால், பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா ஹைதர் என்ற பெண், பப்ஜி விளையாட்டில் பழக்கமான இந்தியாவின் நொய்டாவை சேர்ந்த இளைஞர் சச்சின் என்பவரை மணப்பதற்காக சட்டவிரோதமாக இந்தியாவில் நுழைந்தார்.
அவர் வந்தது மட்டும் அல்லாது தன்னுடைய 4 குழந்தைகளையும் அழைத்து வந்தார். திருமணமாகி, சச்சினுடன் வாழ்ந்துவரும் சீமாவின் நடவடிக்கையில் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்படவே, உண்மை போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் போலீஸ் வளையத்திற்குள் வந்தனர்.
இந்நிலையில், தற்போது சீமா ஹைதரின் முதல் கணவர் குலாம், சீமா மற்றும் அவரின் தற்போதைய கணவர் சச்சினுக்கும் தலா ரூ.3 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மேலும் தனது 4 குழந்தைகளையும் தன்னிடம் அழைத்து வர இந்தியா வழக்கறிஞரையும் நியமித்துள்ளார். மேலும் சீமாவின் சகோதரர் என்று கூறிக்கொண்ட டாக்டர் ஏபி சிங் என்பவருக்கும் ரூ. 5 கோடி அபராத தொகையை செலுத்த வேண்டும் என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குலாம் நியமித்த இந்திய வழக்கறிஞரான அலி மோமின் என்பவர் சீமா தம்பதியருக்கு அளித்துள்ள நோட்டீஸில் , ‘இருவரும் குலாமிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் அபராதத் தொகையை ஒரு மாதத்திற்கும் டெப்பாசிட் செய்ய வேண்டும்.’ என வலியுறுத்தியுள்ளார்.
2019 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த கதை 2024 ஆம் ஆண்டு ஆகியும் பல சர்ச்சைகளை கடந்து தொடர்ந்து கொண்டே இருக்கிறது.