இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் போர்விமானங்களை, இந்திய விமானப்படை இன்று விரட்டியடித்துள்ளது.
புல்வாமாவில் கடந்த 14 ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த கொடுரத் தாக்குத லை பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு செயல்படுத்தியது. இதையடுத்து பயங்கரவாதத்தை ஆதரிக்கும்
பாகிஸ்தானுக்கும் ஜெய்ஷ் இ முகமது அமைப்புக்கும் உலகநாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. பாகிஸ்தானுக்கு எதிரான நட வடிக்கைகளை இந்தியா, அதிரடியாக எடுத்து வருகிறது.
*சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் போர் விமானம்)
கடந்த சில நாட்களுக்கு முன், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத முகாம் மீது இந்திய விமானப்படை குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது. அப்போது விரட்டிச் சென்ற இந்திய விமானத்தை பாகிஸ்தான் சுட்டது. அதில் இருந்து பாராசூட் மூலம் தப்பிய இந்திய விமானி, பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்தார். அவரை பாகிஸ்தான் பிடித்து வைத்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் போர் விமானம் மீண்டும் இந்திய எல்லைக்குள் இன்று ஊடுருவ முயன்றது. பூஞ்ச் எல்லை அருகே இந்த ஊடுருவும் முயற்சி நடந்தது. இதைக் கண்ட இந்திய விமானப்படை, பாகிஸ்தான் விமானத்தை விரட்டியதை அடுத்து பாகிஸ்தான் எல்லைக்குள் அந்த விமானங்கள் தப்பிச் சென்றன.