எல்லை பாதுகாப்பை வலுப்படுத்த தீவிரம் காட்டும் பாகிஸ்தான்..!

எல்லை பாதுகாப்பை வலுப்படுத்த தீவிரம் காட்டும் பாகிஸ்தான்..!
எல்லை பாதுகாப்பை வலுப்படுத்த தீவிரம் காட்டும் பாகிஸ்தான்..!
Published on

இந்திய எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்துதற்காக 600 டாங்க்குகளை பாகிஸ்தான் வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. T-90 ரகத்தை சேர்ந்த டாங்க்குகளை ரஷ்யாவிடமிருந்து வாங்க உள்ளதாக மத்திய புலனாய்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த டாங்கிகள் 3 முதல் 4 கிலோ மீட்டர் வரை சுடக் கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர இத்தாலியிலிருந்து SP MIKE- 10 வகையை சேர்ந்த 120 அதிநவீன துப்பாக்கிகளை பாகிஸ்தான் வாங்கியுள்ளதாகவும், மேலும் 125 துப்பாக்கிகளை வாங்க உள்ளதாகவும் புலனாய்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தவிர சீனாவிடமிருந்து VT-4 வகை டாங்க்குகளையும் உக்ரைனிடமிருந்து OPLOD - P வகை டாங்க்குகளையும் வாங்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. மேலும் பல நவீனமயமாக்கல் திட்டங்களையும் 2025-ஆம் ஆண்டுகள் நிறைவேற்ற பாகிஸ்தான் இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்திய ராணுவம் 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஆயுதங்கள், பாதுகாப்பு சாதனங்களை வாங்க திட்டமிட்டுள்ள நிலையில் அது பல்வேறு சிக்கல்களால் முடங்கியுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானின் திட்டங்கள் இந்தியாவுக்கு கவலை தரும் விஷயங்கள் என பாதுகாப்புத்துறை நிபுணர்கள் தெரிவித்து்ளளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com