பாகிஸ்தானிலுள்ள டீ கடை ஒன்றில் இந்திய விமானப் படை வீரர் அபிநந்தனின் புகைப்படத்துடன் கூடிய போஸ்டர் ஒட்டப்படுள்ளது.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா பால்கோட் பகுதியிலுள்ள பயங்கரவாதிகளின் முகாமில் தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து பாகிஸ்தானைச் சேர்ந்த எஃப் 16 ரக விமானத்தை இந்தியாவின் மிக் 21 ரக போர் விமானத்தை கொண்டு விரட்டியடிக்கப்பட்டது. அப்போது மிக் 21 ரக விமானத்தை இயக்கிய அபிநந்தன் பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டார்.
அபிநந்தன் பாகிஸ்தானில் இருந்த போது, அவர் பற்றிய ஒரு வீடியோ வெளியானது. அபிநந்தனிடம் பாகிஸ்தான் அதிகாரிகள் விசாரணை நடத்துவதுதான் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தது. அந்த வீடியோவில் டீ அருந்திகொண்டே அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அபிநந்தன் கூலாக பதில் அளித்தார். இந்த வீடியோ அப்போது அதிகம் பகிரப்பட்டு மக்களின் கவனத்தை ஈர்த்தது. அதுவும், முக்கியமான விவரங்களை பாகிஸ்தான் அதிகாரிகள் கேட்ட போது, சொல்லமுடியாது என்று அவர் கூறிய பதில் பலருக்கும் பிடித்திருந்தது.
இந்நிலையில், பாகிஸ்தானிலுள்ள டீ கடை ஒன்றில் அபிநந்தனின் புகைப்படம் கொண்ட போஸ்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த டீ கடை பாகிஸ்தானின் கராச்சியில் அமைந்துள்ளது. அக்கடையிலுள்ள அந்த போஸ்டரில், “இந்தக் கடையில் விற்கப்படும் டீ எதிரியை கூட நண்பனாக வைக்கும் வகையில் இருக்கும்” என்ற வாசகத்தையும் உருதுவில் எழுதப்பட்டு இருந்தது.
இந்தப் போஸ்டர் சமூக வலைத்தளங்கள் வைராலாகிவருகிறது. இந்த போஸ்டர் குறித்து சமூக வலைதளங்களில் பலரும் தங்களின் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். அத்துடன் இதனை பகிர்ந்தும் வருகின்றனர்.