பாகிஸ்தான் நிறுவனத்திடம் இருந்து இந்திய அரசியல் கட்சிகள் நன்கொடை பெற்றனவா? உண்மை என்ன?

பாகிஸ்தானை தலையிடமாக கொண்ட நிறுவனத்திடமிருந்து அரசியல் கட்சிகள் நன்கொடை பெற்றதாகவும், அதுவும் புல்வாமா தாக்குதல் நடந்த ஒரு சில வாரத்தில் இந்த நன்கொடை பெறப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
நன்கொடையா
நன்கொடையாமுகநூல்
Published on

பாகிஸ்தானை தலையிடமாக கொண்ட நிறுவனத்திடமிருந்து அரசியல் கட்சிகள் நன்கொடை பெற்றதாகவும், அதுவும் புல்வாமா தாக்குதல் நடந்த ஒரு சில வாரத்தில் இந்த நன்கொடை பெறப்பட்டதாகவும் தகவல் வெளியாகி வைரலாக பகிரப்பட்டு வந்தன.

தேர்தல் பத்திரத்தை சட்ட விரோதம் என அறிவித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக இற்றப்பட்ட சட்ட திருத்தங்களை ரத்து செய்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கியிருந்தது. மேலும், கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தேர்தல் பத்திரம் பெற்ற அரசியல் கட்சிகள் குறித்த விவரங்களை மூன்று வாரத்திற்குள் இந்திய தலைமை தேர்தல் ஆணையரிடம் வழங்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.

இருப்பினும் கால அவசாகம் கேட்டு எஸ்பிஐ வங்கி நாட்கள் கடத்தி கொண்டே போனதால் வங்கி செயல்படக்கூடிய நேரத்திலேயே, அதுவும் மார்ச் 12க்குள் (நேற்று), கடந்த 2019ஆம் ஆண்டு முதல் அரசியல் கட்சிகள் யார்யாரிடத்தில் இருந்து எவ்வளவு தொகையை பெற்றன, நன்கொடையாளர் யார் உள்ளிட்ட விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்.பி.ஐ வங்கி வழங்க வேண்டும். மேலும் இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15க்குள் இந்த விவரங்களை இணையத்தில் வெளியிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

அதன் அடிப்படையில், எஸ்பிஐ வங்கி தேர்தல் பத்திர விபரங்களை தேர்தல் ஆணையத்தில் வழங்கியது. அந்தவிவரங்களை மார்ச் 14ஆம் தேதியே தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்கொடையா
தேர்தல் பத்திரம் விவகாரம் - அதிகபட்சமாக வாங்கிய கோவையை சேர்ந்த லாட்டரி தொழிலதிபர்!

இந்நிலையில், புல்வாமா தாகுதலுக்கு பிறகு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனத்திடம் இருந்து அரசியல் கட்சிகள் நன்கொடை பெற்றுள்ளதாக தகவல்கள் பகிரப்பட்டு வந்தன.

ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர்.

இது நிகழ்ந்த ஒரு சில வாரங்களுக்கு பிறகே பாகிஸ்தானில் உள்ள கராச்சியை கொண்டு தலமையிடமாக செயல்படும் HUB POWER COMPANY என்ற நிறுவனத்திடமிருந்து 2019, ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதியில் அரசியல் கட்சிகள் நன்கொடை பெற்றதாக அந்த தகவல்கள் பகிரப்பட்டன. இந்த ஒரே நாளில் மட்டும், அந்நிறுவனம் 14 தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையை வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், HUB POWER COMPANY நிறுவனம் பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் என்பது தவறான தகவல் என்பது பின்பு தெரியவந்தது. அந்த நிறுவனம் டெல்லியை சேர்ந்த நிறுவனம் என்று உண்மை சரிபார்ப்பு இணையதளமான ஆல்ட் நியூஸ் -ன் நிறுவனர் முகமது சுபைர் தனது x வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com