பாகிஸ்தானில் சீக்கிய மதக்குருவின் மகள் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு, கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் லாகூர் அருகில் உள்ள நங்கனா சாகிப் பகுதியைச் சேர்ந்த சீக்கிய இளம் பெண் ஒருவர், கடந்த சில நாட்க ளுக்கு முன் கடத்தப்பட்டார். அவர் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு, இஸ்லாமிய இளைஞருக்கு திருமணம் செய்து கொடுக்கப் பட்டார். இதையடுத்து இந்த விஷயத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலையிட வேண்டும் என்று அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், கடத்தப்பட்ட பெண்ணின் தந்தை, ‘எங்கள் வீட்டுக்குள் சில குண்டர்கள் புகுந்து என் மகளை கடத்திச் சென்றனர். பின்னர் அவரை கொடுமைப்படுத்தி கட்டாயமாக இஸ்லாம் மதத்துக்கு மாற்றி, திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இதுபற்றி போலீசில் புகார் கொடுக்கச் சென்றோம். பல மூத்த அதிகாரிகளை சந்தித்தோம். ஆனால், அவர்கள் எங்கள் புகாரை கண்டு கொள்ளவில்லை. வீட்டுக்கு மீண்டும் வந்த அந்த குண்டர்கள், எங்கள் புகாரை வாபஸ் வாங்கும்படி மிரட்டிவிட்டுச் சென்றார் கள். எங்களையும் இஸ்லாம் மதத்துக்கு மாறும்படி மிரட்டியுள்ளனர். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தலைமை நீதிபதி ஆசிப் சயீத் கோஷா ஆகியோர் இந்த விவகாரத்தில் எங்களுக்கு உதவ வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்துள்ளார்.
(கடத்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர்)
இதற்கு பாகிஸ்தான் சீக்கிய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அங்கு ஆளுநர் மாளிகை நோக்கி இன்று ஆர்ப் பாட்டம் நடத்தவும் முடிவெடுத்துள்ளன.
டெல்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழு தலைவரும், ஷிரோமணி அகாலி தள எம்எல்ஏவுமான மஞ்சிந்தர் சிங் சிர்சாவும் இந்த சம்பவத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் சர்வதேச சமூகத் தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் சீக்கிய மத சுதந்திரத்துக்கான அச்சுறுத்தல் என்பதால் இந்த பிரச்னை ஐநாவில் எழுப்பப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் சிறுபான்மையராக உள்ள இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவப் பெண்களை கடத்தி, கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்து, இஸ்லாமியர்ளுக்கு திருமணம் செய்து வைப்பது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.