இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை அறிவித்தது மத்திய அரசு!

மத்திய அரசு இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை அறிவித்துள்ளது.
பத்ம விருதுகளை அறிவித்தது மத்திய அரசு
பத்ம விருதுகளை அறிவித்தது மத்திய அரசுட்விட்டர்
Published on

மத்திய அரசு இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை அறிவித்துள்ளது. அதில் மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கி கவுரவித்துள்ளது மத்திய அரசு; நடிகர் சிரஞ்சீவி, வெங்கையா நாயுடு, மிதுன் சக்கரவர்த்தி உள்ளிட்டோருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 110 பேர் இந்த விருதுகளை பெற உள்ளனர்.

இவர்களில் பத்மஸ்ரீ விருதுகளை பெறுவோர் யார் யாரென இங்கே பார்க்கலாம்.

  • ஒடிசாவை சேர்ந்த கிருஷ்ண லீலா பாடகர் கோபிநாத் ஸ்வைன்

  • மத்திய பிரதேச நாடக கலைஞர் ஓம்பிரகாஷ் சர்மா,

  • கேரள மாநில கண்ணூரை சேர்ந்த தய்யம் நாட்டுப்புற நடனக் கலைஞர் நாராயணன்,

  • ஓடிசா சப்தா நிருத்யா நாட்டுப்புற நடன நிபுணர் பகபத் பதன்,

  • தமிழகம் கோவையை சேர்ந்த வள்ளி, ஒயில், கும்மி நாட்டுப்புற நடன கலைஞர் பத்திரப்பன்

  • சிக்கிம் மாநில லெப்சா பழங்குடியினத்தைச் சேர்ந்த மூங்கில் கைவினை கலைஞர் ஜோர்டான் லெப்சா

உள்ளிட்டோருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுளளது.

Omprakash sharma
Omprakash sharmapt desk

அதேபோல்,

  • திரிபுரா சக்மா லோயின்லூம் சால்வை நெசவாளர் ஸ்மிருதி ரேகா சக்மா

  • மேற்கு வங்கம் சிற்பி சனாதன் ருத்ர பால்

  • மணிப்பூர் மாநில லாங்பி குயவர், உக்ருல் மச்சிஹான் சாசா

  • தெலங்கானா சிந்து யக்ஷகானம் நாடக கலைஞர் காடம் சம்மையா

  • ராஜஸ்தான் பெஹ்ருபியா கலைஞர் பில்வாரா ஜான்கிலால்

  • தெலங்கானா 3-ம் தலைமுறை புர்ரா வீணை வாசிப்பவர் தாசரி கொண்டப்பா

  • உத்தரப்பிரதேச பித்தளை மரோரி கைவினை கலைஞர் பாபு ராம் யாதவ்

  • மேற்கு வங்க 3-ம் தலைமுறை சாவ் முகமூடி தயாரிப்பாளர் சந்திர சூத்ரதர்

  • தமிழக விளையாட்டு வீரர் ஜோஷ்னா சின்னப்பா

  • இலக்கியம் மற்றும் கல்வி பணிக்காக தமிழகத்தை சேர்ந்த ஜோ டி குரூஸ்

  • மருத்துவர் ஜி.நாச்சியார் நாதஸ்வர கலைஞர் சேசம்பட்டி டி.சிவலிங்கம்

T.Sivalingam
T.Sivalingampt desk
  • பர்பதி பருவா - இந்தியாவின் முதல் பெண் யானை பராமரிப்பாளர் (பாகான்), அசாம்

  • சாமி முர்மு - பழங்குடி சுற்றுச்சூழல் ஆர்வலர், ஜார்க்கண்ட்

  • சங்க்தங்கிமா - சமூக சேவகர், மிசோரம்

  • ஜாகேஷ்வர் யாதவ் - பழங்குடியினர் நல பணியாளர், சத்தீஸ்கர்

  • குர்விந்தர் சிங் - சிர்சாவைச் சேர்ந்த திவ்யாங் சமூக சேவகர், ஹரியாணா

  • சத்தியநாராயணா - காசர்கோட்டைச் சேர்ந்த விவசாயி, கேரளா

  • துகு மாஜி - சிந்த்ரி கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி சுற்றுச்சூழல் ஆர்வலர், மேற்கு வங்கம்

  • கே.செல்லம்மாள் - இயற்கை விவசாயி, அந்தமான்

    ஹேம்சந்த் மஞ்சி - நாராயண்பூரைச் சேர்ந்த மருத்துவப் பயிற்சியாளர், சத்தீஸ்கர்

  • யானுங் ஜமோ லெகோ - மூலிகை மருத்துவ நிபுணர், அருணாச்சல பிரதேசதம்

  • சோமண்ணா - பழங்குடியினர் நலப் பணியாளர், மைசூரு - கர்நாடகா

  • சர்பேஸ்வர் பாசுமதி - பழங்குடி இனத்தை சேர்ந்த விவசாயி, அசாம்

  • பிரேமா தன்ராஜ் - பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் சமூக சேவகர், கர்நாடகா

  • உதய் விஸ்வநாத் தேஷ்பாண்டே - சர்வதேச மல்லர் கம்ப பயிற்சியாளர், மகாராஷ்டிரா

  • யாஸ்டி மனேக்ஷா இத்தாலியா - நுண்ணுயிரியல் நிபுணர், குஜராத்

  • சாந்தி தேவி பாஸ்வான் மற்றும் சிவன் பாஸ்வான் - தம்பதியர்களான இவர்கள் இருவரும் கோட்னா ஓவியர்கள், பிஹார்

  • ரத்தன் கஹர் - பாது நாட்டுப்புற பாடகர், மேற்கு வங்கம்

  • அசோக் குமார் பிஸ்வாஸ் - ஓவியர், பிஹார்

  • பாலகிருஷ்ணன் சதானம் புதிய வீட்டில் - கதகளி நடனக் கலைஞர், கேரளா

  • உமா மகேஸ்வரி - பெண் ஹரிகதா விவரணை செய்பவர், ஆந்திரா

உட்பட சுமார் 110 பேருக்கு இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com