பெங்களூரு: ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கி வந்த பெண்கள் குழு - வைரல் வீடியோ

பெங்களூரு: ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கி வந்த பெண்கள் குழு - வைரல் வீடியோ
பெங்களூரு: ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கி வந்த பெண்கள் குழு - வைரல் வீடியோ
Published on

120 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஏற்றி வந்த ரயிலை பெண் குழுவினர் இயக்கி வந்தது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


ஜாம்ஷெட்பூரில் இருந்து பெங்களூருக்கு 120 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஏற்றி வந்த ரயிலை பெண்கள் அடங்கிய குழு ஒன்று இயக்கி வந்துள்ளது.

இது தொடர்பான வீடியோவை மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அதில், “ 7 ஆவது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் ஜாம்ஷெட்பூர் டாடா நகரில் இருந்து பெங்களூருக்கு வந்தடைந்தது. இந்த எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கிய பெண்கள் குழு, தொடர்ந்து மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னாதாக, கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்றால், தினமும் மாநிலத்திற்கு 1,200 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்கவேண்டும் என அம்மாநிலம் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது. கர்நாடகாவில் நேற்று தினசரி பாதிப்பு 32,218 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் 353 பேர் உயிரிழந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com