குர்மீத் வங்கி கணக்கில் ரூ.75 கோடி

குர்மீத் வங்கி கணக்கில் ரூ.75 கோடி
குர்மீத் வங்கி கணக்கில் ரூ.75 கோடி
Published on

தேரா சச்சா சவுதா அமைப்பின் பெயரில் 473 வங்கிக் கணக்குகள் இருப்பதும், அதில் ரூ.75 கோடி டெபாசிட் செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.

பாலியல் வன்கொடுமை வழக்கில் 'தேரா சச்சா சவுதா' அமைப்பை நடத்தி வந்த, குர்மீத் ராம் ரஹீமுக்கு 10 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப் பட்ட அவரை, குற்றவாளி என அறிவிக்கப்பட்டதும் அவனது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதில் பலர் இறந்தனர். ஏராளமான பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிமன்றம் சேதப்படுத்தப்பட்ட பொதுச்சொத்துக்களின் மதிப்பை கணக்கிட்டு அதை தேரா சச்சா சவுதா அமைப்பிடமிருந்து வசூலிக்க உத்தரவிட்டது. இதையடுத்து சிறப்பு புலனாய்வுக் குழு, விசாரிக்கத் தொடங்கியது. அந்த அமைப்பின் வங்கிக் கணக்குகள் சோதனை செய்யப்பட்டன.

அந்த அமைப்பின் பெயரில் 473 வங்கிக் கணக்குகளும், அதில் 75 கோடி ரூபாயும் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்புக்கு சொந்தமாக, ஹரியானா மாநிலம் சிர்சாவில் மட்டும், 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்கள் இருப்பதும் தெரியவந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com