முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் - பெங்களூருவில் மட்டும் 2 லட்சத்திற்கு மேல் வசூல்

முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் - பெங்களூருவில் மட்டும் 2 லட்சத்திற்கு மேல் வசூல்
முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் - பெங்களூருவில் மட்டும் 2  லட்சத்திற்கு மேல் வசூல்
Published on
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் சுற்றியவர்களிடம் இருந்து இதுவரை ரூ .2,39, 505 லட்சம் அபராதமாக வசூலித்துள்ளது.
 
நாடு முழுவதும் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக வேண்டி, பொது இடங்களுக்கு வரும் மக்கள் முகக் கவசம் அணிய வேண்டியது கட்டாயம் என மத்திய அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவை மீறிப் பல மாநிலங்களில் மக்கள் முகக் கவசம் அணியாமலே வெளியே நடமாடி வருகின்றனர். சில தினங்கள் முன்பாக கர்நாடக மாநிலத்தில் மதுக்கடைகளைத் திறந்த போது பெரும்பாலானவர்கள் முகக் கவசம் அணியாமலே வந்து கடைகளில் முன்பு குவிந்தனர். மேலும் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமலிருந்ததைச் சுட்டிக்காட்டி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் வெளியாகி இருந்தன.
 
 
இந்நிலையில் பொது இடத்தில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு ரூ .1,000 அபராதம் வசூலிக்கப்படும் என்று கர்நாடக மாநிலம் புருஹத் பெங்களூரு மாநகர பலிகே  (பிபிஎம்பி) கடந்த வியாழக்கிழமை அன்று ஒரு சுற்றறிக்கை  வெளியிட்டது. அதன் பின்னர் மீண்டும் அபராத தொகையை மாற்றி  ரூ .2,000 வசூலிக்கப்படும் என்றது. இந்த அறிவிப்பு கடுமையான விமர்சனத்தைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து, பிபிஎம்பி அபராதத்தை நகராட்சி பகுதிகளில் ரூ .200 ஆகவும், பிற பகுதிகளில் ரூ .100 ஆகவும் மாற்றி அமைத்துள்ளதாக ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ தெரிவித்துள்ளது.
 
 
இந்த அறிவிப்பு வெளியான முதல் நாளில், 51,700  ரூபாய் வரை பிபிஎம்பி அபராதம் வசூலித்தது. ஞாயிற்றுக்கிழமை அன்று ரூ .98,350 வசூலானது.  திங்களன்று, விதிமுறைகளை மீறியவர்களிடமிருந்து அபராதமாக ரூ .89,455 வசூலித்ததாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.  இதனிடையே நகரின் கிழக்கு மண்டலத்தில் 55 நபர்களிடமிருந்து அபராதமாக ரூ .21,305 வசூலிக்கப்பட்டுள்ளது. பொம்மநஹள்ளி மண்டலத்திலிருந்து ரூ .16,200, மகாதேவபுரா மண்டலத்திலிருந்து ரூ .15,000 வசூலிக்கப்பட்டுள்ளது. மேற்கு மண்டலத்தில் 14,800 ரூபாயும் தசரஹள்ளி மண்டலத்திலிருந்து 10,000 ரூபாயும் வசூலிக்கப்பட்டுள்ளது.  
 
பெங்களூரு நகரம் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த மாநிலத்தில் 657 கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இதில் பெங்களூரில் 150 பேர் உள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com