குஜராத்தில் தங்கள் நிலத்தை அரசாங்கம் கையகப்படுத்திவிட்டதால், தாங்கள் இறப்பதற்கு அனுமதி வழங்கக்கோரி 5000க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவகத்திற்கு இன்று 5000க்கும் மேற்பட்ட விவசாயிகள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், தங்கள் விவசாய நிலங்களை மாநில அரசாங்கமும், குஜராத் மின்உற்பத்தி நிறுவனமும் இணைந்து பறித்துக்கொண்டதாக குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் தாங்களும், தங்கள் குடும்பத்தினரும் பிழைக்க வழியின்றி இருப்பதகாவும், தங்களை இறப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த மனுவை குடியரசுத்தலைவர், பிரதமர் மற்றும் குஜராத் முதலமைச்சருக்கு அனுப்ப வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அத்துடன் தங்கள் நிலங்களை கையகப்படுத்துவதற்காக மாநில அரசும், குஜராத் மின்உற்பத்தி நிறுவனமும் காவல்துறையை பயன்படுத்திக்கொண்டதாகவும் புகார் தெரிவித்துள்ளனர். தங்களை இந்த இடத்தில் இருந்து விரட்டுவதற்கு 20 வருடங்களாக முயற்சிகள் நடத்தப்பட்டு வருவதகாவும், இதற்காக சட்டத்திற்கு புறம்பான வேலைகளை அந்நிறுவனம் செய்து வருவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.