சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்ட பின், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 17 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தேவஸம்போர்டு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு சபரிமலையில் மண்டல பூஜைக்காக கடந்த 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டு 7 நாட்கள் நிறைவடைந்தது. கடந்த ஆண்டு 7 நாள்களில் சுமார் 9 கோடியே 99 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்திருந்த நிலையில், இந்த ஆண்டு சுமார் 10 கோடி ரூபாய் அதிகரித்து 7 நாள்களில் சுமார் 17 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.
இந்த ஆண்டு இதுவரை 3 லட்சத்து 25 ஆயிரம் பேர் ஐய்யப்பனை தரிசித்துள்ளனர். அதிகபட்சமாக கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 76 ஆயிரம் பேர் தரிசித்துள்ளதாக தேவஸம்போர்டு தெரிவித்துள்ளது. இதில் அரவணை பிரசாதம், அப்பம் பிரசாதம், நெய் அபிஷேகம், உண்டியல், தங்கும் விடுதி என அனைத்து ஆதாரங்கள் மூலமும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிக வருமானம் கிடைத்துள்ளது.