தனிநபர்களின் ஆதார் விவரங்கள் மத்திய, மாநில அரசுகளின் 210 இணையதளங்களில் வெளியானது தெரியவந்துள்ளது.
மக்களிடமிருந்து பெறப்படும் ஆதார் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படுவது இல்லை என புகார்கள் எழுந்தன. அதனடிப்படையில், ஆதார் சேவையை அளித்துவரும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ஆதார் விவரங்கள் வெளியானது குறித்து விவரங்கள் கேட்கப்பட்டன. அதற்கு, மத்திய மாநில அரசுகளின் 210 இணையதளங்களில் ஆதார் விவரங்கள் வெளியாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, தகவல் தெரிந்தவுடனேயே, சம்பந்தப்பட்ட இணையதளங்களிலிருந்து தனிநபர் ஆதார் விவரங்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், தங்கள் மூலமாக ஆதார் விவரங்கள் வெளியிடப்படவில்லை எனவும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.