இமாச்சல பிரதேசம் : திடீரென்று இறந்த 1400 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த பறவைகள்

இமாச்சல பிரதேசம் : திடீரென்று இறந்த 1400 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த பறவைகள்
இமாச்சல பிரதேசம் : திடீரென்று இறந்த 1400 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த பறவைகள்
Published on

இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தின் பாங் அணை பகுதியில் திடீரென்று 1400 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த பறவைகள் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது.

இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தின் பாங் அணை பகுதியில் திடீரென்று 1400 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த பறவைகள் இறந்து கிடந்ததை அடுத்து, அறிவிப்பு வரும்வரை நீர்த்தேக்கத்தின் எல்லையில் அனைத்து சுற்றுலா நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டன. இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகள் இறந்த உடல்களில் இருந்து மாதிரிகளை சேகரித்து போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு விலங்கு நோய் ஆய்வகத்தில் சோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

'காங்க்ராவில் இப்போது  மறுஉத்தரவு வரும் வரை ஒரு கிலோமீட்டருக்குள் மனித மற்றும் உள்நாட்டு கால்நடை நடவடிக்கைகள் எதுவும் அனுமதிக்கப்படாது. ஒரு  கி.மீ தூரம் எச்சரிக்கை மண்டலமாகவும், அதைச் சுற்றியுள்ள மற்றொரு 9 கி.மீ. கண்காணிப்பு மண்டலமாகவும் உள்ளது”  என்று காங்க்ரா துணை ஆணையர் ராகேஷ் குமார் பிரஜாபதி தெரிவித்தார்.

இறந்த பறவைகளில் பெரும்பான்மையானவை மூடப்படாத தலையையுடைய வாத்துக்கள் என்று காடுகளின் முதன்மை தலைமை கன்சர்வேட்டர் அர்ச்சனா சர்மா தெரிவித்தார். புலம்பெயர்ந்த பறவைகளின் இறப்புகளை சரிபார்க்க அனைத்து மாவட்டங்களின் பிரிவு வன அதிகாரிகள் எச்சரிக்கையாக உள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com