கொரோனா பெருந்தொற்று காலத்தில் வேலை இழந்த 10 லட்சம் பேர் வெளிநாடுகளில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பி விட்டதாக கேரள அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு மே மாதம் முதல் இந்தாண்டு மே மாத வரையிலான காலக்கட்டங்களில் கேரளாவில் இருந்து வெளிநாடுகளுக்கு 27 லட்சம் பேர் பயணித்ததாகவும், அவர்களில் சுமார் 14 லட்சத்து 63 ஆயிரம் பேர் சொந்த ஊர்களுக்கு திரும்பிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஊர் திரும்பியவர்களில் 70 விழுக்காட்டிற்கும் மேற்பட்டவர்கள், அதாவது 10 லட்சத்து 45ஆயிரம் பேர் வேலை இழந்தவர்கள் எனவும், அவர்களில் 96 சதவிகிதம் பேர் வளைகுடா நாடுகளில் பணிபுரிந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து மட்டும் சுமார் 8 லட்சத்து 67 ஆயிரம் பேர் கேரளா திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.