"மூன்று நாள்களில் 6 லட்சம் புலம்பெயர்ந்தவர்கள் ரயிலில் பயணம்" - இந்திய ரயில்வே

"மூன்று நாள்களில் 6 லட்சம் புலம்பெயர்ந்தவர்கள் ரயிலில் பயணம்" - இந்திய ரயில்வே
"மூன்று நாள்களில் 6 லட்சம் புலம்பெயர்ந்தவர்கள் ரயிலில் பயணம்" - இந்திய ரயில்வே
Published on

கடந்த மூன்று நாள்களில் மட்டும் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்குச் சென்றதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

பிற மாநிலங்களில் தவித்து வரும் தொழிலாளர்களைச் சொந்த மாநிலங்களுக்கு அனுப்புவதற்கான விதிகளை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மாதம் 29 ஆம் தேதி வெளியிட்டது. இதன்படி, அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் இதற்கென நிலையான விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது.

இதைத்தொடர்ந்து தமிழகத்தில் இருக்கக்கூடிய வெளிமாநில தொழிலாளர்களைச் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பக்கூடிய நடவடிக்கையைத் தமிழக அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. அந்த வகையில் படிப்படியாக ரயில் மூலமும் பேருந்துகள் மூலமும் சொந்த மாநிலங்களுக்கு அவர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக ரயில்வே துறை ஷராமிக் என்ற சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது.

இந்த ரயில் மூலம் இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பல்வேறு மாநிலங்களிலிருந்து சொந்த ஊர்களுக்குச் சென்றதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. கடந்த மூன்று நாள்களில் மட்டும் நாள் ஒன்றுக்கு 2 லட்சம் பேர் ரயிலில் பயணித்துள்ளனர். மேலும் எதிர் வரும் நாள்களில் நாள் ஒன்றுக்கு மூன்று லட்சம் பேர் ரயிலில் செல்ல வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 15 நாள்களில் 1074 ஷராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளது.

இதில் பயணித்த புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவருக்கும் இலவசமாக உணவு, தண்ணீர் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சிறப்பு ரயில்கள் ஆந்திரம், டெல்லி, குஜராத், ஹரியானா, மகாராஷ்ட்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், தெலங்கானா, கர்நாடகா, கேரளா, கோவா, ஜார்கண்ட், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார் மாநிலங்களிலிருந்து இயக்கப்பட்டதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com