கடந்த மாதத்தில் யுபிஐ (UPI) வாயிலாக மின்னணு பணப் பரிவர்த்தனைகள் 600 கோடியைத் தாண்டியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, யுபிஐ வாயிலாக மின்னணு பணப்பரிவர்த்தனை என்பது புதிய தொழில்நுட்பங்களைப் பின்பற்ற மக்கள் எடுத்துள்ள தீர்மானத்தின் மூலம் பொருளாதாரத்தை வெளிப்படைத்தன்மையாக வைக்க வழியேற்படுத்துவதாக கூறியுள்ளார். கொரோனா காலத்தில் மின்னணு பரிவர்த்தனைகள் மிகவும் உபயோகமாக இருந்ததாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிக அதிகபட்சமாக ஜூலையில் மின்னணு பரிவர்த்தனைகள் 600 கோடியைத் தாண்டியுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.