ஓடிடி நிறுவனங்களுக்கு ஒழுங்குமுறை அமைப்பு வருமா?

ஓடிடி நிறுவனங்களுக்கு ஒழுங்குமுறை அமைப்பு வருமா?
ஓடிடி நிறுவனங்களுக்கு ஒழுங்குமுறை அமைப்பு வருமா?
Published on

ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம், நெட்ஃப்ளிக்ஸ் போன்ற ஓ.டி.டி சேவை தரும் நிறுவனங்களை ஒழுங்குப்படுத்த தனி அமைப்பை ஏற்படுத்துமாறு தொடரப்பட்ட பொது நல மனு தொடர்பாக பதில் தருமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வீடுகளில் நேரடியாக திரைப்படங்களையும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பும் ஓடிடி நிறுவனங்கள் வேகமாக பிரபலமாகி வருவதாகவும் எனவே இவற்றை ஒழுங்குபடுத்த தனி அமைப்பு தேவை என்றும் பொது நல மனு தொடரப்பட்டிருந்தது.

இதனால் தணிக்கை அமைப்புகளின் சான்றிதழ் இல்லாமலேயே படங்கள் பொது மக்களை சென்றடையும் நிலை இருப்பதாக வழக்கறிஞர்கள் சஷாங்க் சேகர் ஜா மற்றும் அபூர்வ அராத்தியா ஆகியோர் தங்கள் பொது நல மனுவில் கூறியிருந்தனர். இது போன்று கட்டுப்பாடுகள் இல்லாமல் படங்களும் நிகழ்ச்சிகளும் மக்களை சென்று சேர்வது சரியானதல்ல என்றும் எனவே இவற்றை ஒழுங்குபடுத்த தனி அமைப்பு வேண்டும் என்றும் பொது நல மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, இது குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசு, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், இணையதளம் மற்றும் மொபைல் சேவை நிறுவனங்களின் சங்கம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com