ஜல்லிக்கட்டு அவசரச் சட்ட வரைவுக்கு குடியரசு தலைவர் இன்றிரவு அல்லது நாளை ஒப்புதல் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜல்லிக்கட்டுக்கு தடை நீங்கும் விதத்தில் அவசரச் சட்டம் கொண்டு வர தமிழக அரசு முடிவு
செய்துள்ளது.
இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கான அவசரச்சட்டம் தொடர்பாக அதிமுக எம்.பி.க்கள் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்
சிங்கை சந்தித்தனர். அப்போது, ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு உதவ வேண்டும் என உள்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதனை தொடர்ந்து, தமிழக அரசு பிறப்பிக்கும் அவசரச்சட்டத்திற்கு உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக
ராஜ்நாத் சிங்கை சந்தித்த பின் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
இதைதொடர்ந்து, தமிழகத்தில் இருந்து அனுப்பட்டுள்ள அவசரச் சட்டத்திற்கான வரைவு தங்களுக்கு கிடைத்ததாக சுற்றுச்சூழல் அமைச்சர் அனில்மாதவ்தவே தெரிவித்தார்.
இந்நிலையில், குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு ஜல்லிக்கட்டு அவசரச் சட்ட வரைவு அனுப்பப்பட்டது.