“பட்ஜெட் பாரபட்சம்” - நாடாளுமன்றத்தில் களத்தில் இறங்கிய எதிர்க்கட்சிகள்!

“எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டப்படுகிறது” எனக்கூறி, நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் I.N.D.I.A. கூட்டணிக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திமுக எம்.பி.க்கள் போராட்டம்
திமுக எம்.பி.க்கள் போராட்டம்ட்விட்டர்
Published on

18வது மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்ற நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த மாதம் பதவி ஏற்றது. இதையடுத்து, 2024-2025 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை, நிதியமைச்சர் நேற்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இதையடுத்து, “இந்த பட்ஜெட் நாட்டுக்கான பட்ஜெட் இல்லை, கூட்டணி கட்சிகளுக்கான பட்ஜெட்” என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டினை முன்வைக்கத் தொடங்கினர்

திமுக எம்.பி.க்கள் போராட்டம்
82 நிமிட பட்ஜெட் உரை; அதிகம் உச்சரிக்கப்பட்ட வார்த்தைகள் எவை? இடம்பெறாத தமிழ், தமிழ்நாடு வார்த்தை!
I.N.D.I.A. கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்
I.N.D.I.A. கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்

முன்னதாக, நேற்று மாலை I.N.D.I.A. கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்களின் கூட்டம் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் இல்லத்தில் நடைபெற்றது. இதில் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி, திமுகவின் டி.ஆர்.பாலு, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார், சிவசேனா கட்சியின் சஞ்சய் ராவத், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் டெரிக் ஓ ப்ரெயின், ஜே.எம்.எம் கட்சியின் மகுவா மாஜி, ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சதா சிபிஎம் கட்சியின் ஜான் பிரிட்டாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், இன்று நடைபெற்ற மக்களவையில் I.N.D.I.A. கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சியினர் கோஷங்களை எழுப்பி நாடாளுமன்றத்தில் உள்ளேயும், வெளியேயும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் முதலில் நாடாளுமன்றத்தின் வெளியே, “மத்திய பட்ஜெட்டில் பாஜக கூட்டணி ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளன. I.N.D.I.A. கூட்டணியை சேர்ந்த எந்த மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கப்படவில்லை” என்று தெரிவித்து அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக எம்.பி.க்கள் போராட்டம்
பட்ஜெட் 2024 - 25: “தமிழ்நாட்டுக்கு எந்த அறிவிப்பும் இல்லை” – எம்.பி. சு.வெங்கடேசன்

இந்த போராட்டத்தில், “ஒன்றிய அரசின் பட்ஜெட்டில், தமிழ்நாடும் இல்லை, திருக்குறளும் இல்லை” என்ற பதாதைகளை ஏந்தி திமுக மற்றும் அதன் கூட்டணி தமிழக எம்.பி.க்கள் போராட்டம் மேற்கொண்டனர். மேலும் திமுக, காங்கிரஸ் சார்பில் இரண்டு அவைகளிலும் எதிர்ப்பு தெரிவித்து கடிதங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

திமுக எம்.பி.க்கள் போராட்டம்
திமுக எம்.பி.க்கள் போராட்டம்

இதனை தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் உள்ளே சென்ற எதிர்க்கட்சியினர், “மத்திய பட்ஜெட் பாரபட்சமானது” என்று முழக்கங்களை எழுப்பினர். மேலும், “அவையின் பிற அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு, பட்ஜெட் குறித்து விவாதிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினர்.

இருப்பினும் சபாநாயகர் ஓம் பிர்லா கேள்வி நேரத்தை தொடர்ந்தார். இதனால், எதிர்க்கட்சிகள் மீண்டும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கிடையேவே கேள்வி நேரம் நடைபெற்றது. இதையடுத்து I.N.D.I.A. கூட்டணி எம்.பி.க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

வெளியே வந்தபின், தமிழக எம்.பி. திருச்சி சிவா இது குறித்து கூறுகையில், “நேற்றை நிதிநிலை அறிக்கை எதிர்க்கட்சிகளை புறக்கணிப்பதாகவும், கூட்டணி கட்சிகள் கேட்டவற்றை கொடுத்து கூட்டணியை காப்பாற்றி கொள்ள மேற்கொள்ளப்பட்ட பட்ஜெட்டாகவும் உள்ளது. பட்ஜெட் என்பது, இந்த ஒட்டுமொத்த நாட்டுக்குமானதாக இருக்கவேண்டும். ஆனால் அப்படி இல்லாமல் ஆளுங்கட்சியின் மனநிலைக்கு ஏற்றவாறு பட்ஜெட் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு என்ற வார்த்தை கூட பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. மெட்ரோ ரயில், எய்ம்ஸ் மருத்துவமனை, வெள்ள நிவாரண நிதி என எதுவுமே தமிழ்நாட்டுக்கு கிடைக்கவில்லை. இதன்மூலம், ஒரு கண்ணுக்கு வெண்ணையும், மற்றொரு கண்ணுக்கு சுண்ணாம்பையும் வைத்துள்ளனர் என்பது வெளிப்படையாக தெரிகிறது” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com