“வக்ஃப் சட்டத்திருத்தம் சமூகத்தில் பிளவை ஏற்படுத்தும்” - கடுமையாக எதிர்க்கும் எதிர்க்கட்சிகள்

வக்ஃப் சட்டம் 1995ல் மத்திய அரசு சட்டத்திருத்தம் மேற்கொள்வது, சமூகத்தில் பிரிவை ஏற்படுத்தும் என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
வக்ஃப் வாரியம், அகிலேஷ் யாதவ்
வக்ஃப் வாரியம், அகிலேஷ் யாதவ்pt web
Published on

நாடு முழுவதும் 30 வக்ஃப் வாரியங்கள் இருக்கின்றன. இந்த வாரியங்களுக்குச் சொந்தமான சொத்துகள் மூலம் ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் வரை வருமானம் கிடக்கிறது. இந்நிலையில், வக்ஃப் சட்டம் 1995 ல் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன்படி அனைத்து வக்ஃப் வாரியங்களும், தங்களுக்குரிய சொத்துகளை மாவட்ட ஆட்சியர்களிடம் பதிவு செய்வது கட்டாயமாகிறது. மேலும் வக்ஃப் வாரியத்துக்குள் பெண்களும் சேர்க்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாகும் என்று தெரிகிறது.

இந்த சட்டத்திருத்தம் மூலம், அனைத்து வருவாயிலும் வெளிப்படைத்தன்மை வரும் என்று ஆளும் பாரதிய ஜனதா தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இந்த சட்டத்திருத்தம் மூலம் இஸ்லாமியர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

வக்ஃப் வாரியம், அகிலேஷ் யாதவ்
வக்ஃப் வாரிய சொத்துக்கள்: 40 சட்டத்திருத்தங்கள்.. வலுத்துவரும் எதிர்ப்புகள்.. முழு விவரம்!

அரசின் தவறான நோக்கத்தை இந்த சட்டத்திருத்தம் காட்டுவதாக கூறியுள்ள IUMLன் மக்களவை உறுப்பினர் E T Mohammed Basheer கூறியுள்ளார். மேலும் இச்சட்டங்கள் மூலம் வக்ஃப்க்கு சொந்தமான சொத்துகளை அரசு எடுத்துக்கொள்ள நினைப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிறுபான்மையினருக்கு கல்வி, வேலைவாய்ப்பை வழங்குவதை விட்டுவிட்டு, அவர்களின் உரிமைகள் மீது தாக்குதல் நடத்துவது கண்டனத்துக்குரியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. அம்ரா ராம் கூறியுள்ளார்.

எம்.பி. திரிவேந்திர சிங் ராவத்
எம்.பி. திரிவேந்திர சிங் ராவத்

நாடாளுமன்றத்தில் இந்த சட்டத்திருத்த மசோதா கொண்டுவரப்பட்டால் கடும் எதிர்ப்பை சந்திக்கும் என்று எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. அதேநேரம், வக்ஃப் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டால், வக்ஃப் வாரியங்களுக்குள் நடக்கும் முரண்பாடுகள் களையப்படும் என்றும், தவறாக பயன்படுத்தப்படும் சொத்துகள் பாதுகாக்கப்படும் என்றும் பாரதிய ஜனதா எம்.பி. திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்துள்ளார்.

வக்ஃப் வாரியம், அகிலேஷ் யாதவ்
'ஹிஸ்புத் தஹீரிர்' அமைப்பு தொடர்பான வழக்கு: NIA-க்கு மாற்றம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com