மத்திய பட்ஜெட்| கூட்டணியை காப்பாற்றுவதற்கான முயற்சி என விளாசும் எதிர்க்கட்சிகள்.. பாமகவும் விமர்சனம்

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு எனும் பெயர் கூட பட்ஜெட்டில் இல்லாதது தமிழ்நாட்டு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக எதிர்க்கட்சியினர் தங்களது அதிருப்திகளை பதிவு செய்து வருகின்றனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ், நிதியமைச்சர் நிர்மலா, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
பாமக நிறுவனர் ராமதாஸ், நிதியமைச்சர் நிர்மலா, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிpt web
Published on

மத்திய பட்ஜெட்

18வது மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்ற நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த மாதம் பதவி ஏற்றது. இதில் 2019ம் ஆண்டு முதல், நாட்டின் முழு நேர நிதியமைச்சராக இருந்து வரும் நிர்மலா சீதாராமனே மீண்டும் நிதியமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

பட்ஜெட் 2024 - 25
பட்ஜெட் 2024 - 25நிர்மலா சீத்தாராமன்

இந்நிலையில், 2024-2025 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை, நிதியமைச்சர் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார். மக்களவை தேர்தலுக்கு முன்பு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட சூழலில், தற்போது தேர்தலுக்கு பிறகு தாக்கல் செய்யும், முதல் முழு பட்ஜெட் இதுவாகும்.

முழுமையாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதில் தமிழ்நாடு என்று ஒரு வார்த்தைக் கூட இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக தமிழ்நாடு அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். அதே சமயத்தில் ஒட்டுமொத்த பட்ஜெட் குறித்தும் அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கண்டனங்களை பதிவு செய்துவருகின்றனர். பல மாநிலங்களின் பெயர்கள் கூட பட்ஜெட்டில் இல்லாதபோது, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும், தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதாதளம் ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் அதிகபட்ச நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ், நிதியமைச்சர் நிர்மலா, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
மத்திய பட்ஜெட் 2024 - 2025 | பீகார், ஆந்திராவுக்கு அடித்தது ஜாக்பாட்... வெளியான அதிரடி அறிவிப்புகள்!

அரசை காப்பாற்றுவதற்கான பட்ஜெட்

சிரோமணி அகாலி தளம் கட்சியின் எம்பியான ஹர்சிம்ரத் கௌர் பாதல், “நாடு முழுவதும் ஏழைகள் மற்றும் இளைஞர்கள் புறக்கணிக்கப்பட்டாலும், பீகார் மற்றும் ஆந்திராவில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்காகவே பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் பிரச்சணைகளை தீர்ப்பது என்ற பெயரில் தங்களது சொந்த நலன்களை மேம்படுத்துவதற்காக பாஜகவில் இணைந்தவர்கள், மத்திய அரசின் கைகளில் ஏன் மாநிலம் தொடர்ச்சியான பாகுபாட்டை எதிர்கொள்கிறது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

ஹர்சிம்ரத் கௌர் பாதல்
ஹர்சிம்ரத் கௌர் பாதல்

மகராஷ்ட்ர மாநிலத்திலும், எதிர்க்கட்சியான மகாவிகாஷ் அகாடி கூட்டணி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசை காப்பாற்றுவதற்கான பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது என எதிர்க்கட்சியினர் விமர்சித்துள்ளனர். மகாராஷ்ட்ராவில் ஏக்நாத்ஷிண்டே தலைமையிலான அரசு மத்திய பட்ஜெட்டில் இருந்து பெற்றது என்ன என்ற கேள்வியையும் மகாவிகாஷ் அகாடி கூட்டணி எழுப்பியுள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸ், நிதியமைச்சர் நிர்மலா, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
“மத்திய பட்ஜெட்டில் இடம்பிடித்துள்ள காங்கிரஸ் வாக்குறுதிகள்” - ப.சிதம்பரம் கருத்து

பாமக அதிருப்தி

டாக்டர் ராமதாஸ், பிரதமர் மோடி, அன்புமணி ராமதாஸ்
டாக்டர் ராமதாஸ், பிரதமர் மோடி, அன்புமணி ராமதாஸ்pt web

தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் பாமக தனது அதிருப்தியை பதிவு செய்துள்ளது. மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். குறிப்பாக தமிழகத்திற்கான திட்டங்கள் ஏதும் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமிpt desk

தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பட்ஜெட்டிற்கு எதிரான தனது அதிருப்தியை பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2024-2025ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கு எந்தவிதமான புதிய திட்டங்களும் அறிவிக்கப்படாதது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது! இந்த வரவு, செலவு அறிக்கை வடமாநிலங்களையும், பா.ஜ.க-வின் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களையும் திருப்திபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதே தவிர, தமிழகத்திற்கு எந்தவிதமான திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என்பது, தமிழகத்தின் மீது மத்திய அரசுக்கு உள்ள காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது” என தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ், நிதியமைச்சர் நிர்மலா, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
மத்திய பட்ஜெட் | “இந்தியாவை 10 ஆண்டுகளுக்கு முன்னோக்கி எடுத்துச் செல்லும் பட்ஜெட்” - ஓபிஎஸ் பாராட்டு

சசிகலா இதுதொடர்பாக தனது சமூக வலைதளப்பக்கத்தில், “மத்திய அரசின் 2024-2025ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் வரவேற்கத்தக்க அம்சங்கள் இடம்பெற்று இருந்தாலும், சாமானிய மக்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக நிறைவேற்றிடாத ஒரு நிதிநிலை அறிக்கையாகத்தான் பார்க்கமுடிகிறது” என தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ், நிதியமைச்சர் நிர்மலா, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
பழனி: நேற்று கல்லூரி மாணவியை கடித்த அதே பகுதி... இன்று இளைஞரை கடிக்க முயன்ற தெருநாய்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com