"ஆவணி - சிங்கம்" மாதாந்திர பூஜைக்காக சபரிமலை நடைதிறப்பு – புதிய தந்திரி பொறுப்பேற்பு

மலையாள மாதத்தின் சிங்கம் மற்றும் தமிழ் மாதத்தின் ஆவணி மாத, மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, நேற்று மாலை (ஆகஸ்ட் 16ல்) திறக்கப்பட்டது.
Sabarimalai
Sabarimalaifile
Published on

செய்தியாளர்: ரமேஷ் கண்ணன்

சபரிமலையில் ஆண்டு தோறும் மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் புதிய தந்திரி நியமனம் நடக்கும். அந்த வகையில் நேற்று புதிய தந்திரி பொறுப்பேற்றுள்ளார். கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் செங்கண்ணூர் முண்டன்காவு பகுதியில் உள்ளது "தாழமண் மடம்". இந்த மடத்தை சேர்ந்தவர்களை "கண்டரரு" குடும்பத்தினர் என அழைக்கின்றனர். பரம்பரை பரம்பரையாக இந்த "கண்டரரு" குடும்பத்தை சேர்ந்தவர்களே, சபரிமலை தந்திரிகளாக நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.

Sabarimalai
Sabarimalaifile

இந்நிலையில் கண்டரரு ராஜீவரு-வின் மகனான 30 வயது நிரம்பிய பிரம்மதத்தன், சபரிமலையின் புதிய தந்திரியாக பொறுப்பேற்றுள்ளார். புதிய தந்திரியாக பொறுப்பேற்ற கண்டரரு பிரம்மதத்தன், தனது எட்டாவது வயதில் இருந்தே வேதங்கள், மந்திரங்கள் கற்க துவங்கியவர். சட்டம் பயின்ற பட்டதாரியான இவர், சர்வதேச நிறுவனம் ஒன்றில் சட்ட ஆலோசகராக பணியாற்றி வந்தார். சபரிமலை பூஜைகளில் பங்கேற்பதற்காக கடந்த ஆண்டு அந்த பணியை துறந்தார்.

Sabarimalai
”நேரம் போதவில்லை.. கடிகாரம் நின்றுவிட்டது.. என் விதியும் கூட”- தகுதிநீக்கம் பற்றி மனம்திறந்த வினேஷ்!

இந்நிலையில் மலையாள மாதத்தின் சிங்கம் மற்றும் தமிழ் மாதத்தின் ஆவணி மாதங்களுக்கான மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, நேற்று மாலை (ஆகஸ்ட் 16ல்) திறக்கப்பட்டது.

ஆகஸ்ட் 21ம் தேதி வரை 5 நாட்கள் நடை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெய் அபிஷேகம் துவங்கி வழக்கமான பூஜைகள் நடக்கும். தினமும் இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும். இதற்கான தரிசன முன்பதிவு துவங்கியுள்ளது. ஆகஸ்ட் 17ம் தேதிக்கான முன்பதிவு ஏற்கனவே முடிந்துள்ளது. ஆகஸ்ட் 18, 19, 20, 21ம் தேதிகளுக்கு பக்தர்கள், sabarimala.org.in என்ற அதிகாரபூர்வ இணைய தளத்தில் முன்பதிவு செய்யலாம் என திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com