ரூ.100 கோடி பேரம் - சந்திரசேகர் ராவ் கட்சியின் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயற்சி?

ரூ.100 கோடி பேரம் - சந்திரசேகர் ராவ் கட்சியின் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயற்சி?
ரூ.100 கோடி பேரம் - சந்திரசேகர் ராவ் கட்சியின் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயற்சி?
Published on

தெலங்கானாவில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க குதிரை பேர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த கட்சியைச் சேர்ந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க குதிரை பேர முயற்சிகள் நடந்திருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. பைலட் ரோஹித் ரெட்டி, காந்தாராவ், பாலாராஜு, பீராம் ஹர்ஸ்வர்தன் ஆகிய 4 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க 3 பேர் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தை ஹைதராபாத்தில் உள்ள ஒரு வீட்டில் வைத்து இறுதி செய்வதாக இருந்தது. எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குபவர்கள் பண்ணை வீட்டுக்கு வந்தவுடன் ரோஹித் ரெட்டி இதுகுறித்து காவல்துறையினரை தொடர்பு கொண்டு, லஞ்சம் கொடுத்து தங்களை விலைக்கு வாங்க முயற்சிப்பதாக தெரிவித்திருக்கிறார். உடனே காவல்துறையினர் விரைந்து வந்து எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க வந்த 3 நபர்களைக் கைது செய்தனர். ஹரியானாவைச் சேர்ந்த சதீஷ் சர்மா, திருப்பதியை சேர்ந்த சிம்மயாஜி, தொழிலதிபர் நந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஐதாராபாத் போலீஸ் கமிஷனர் ஸ்டீபன் ரவீந்திரா தெரிவித்துள்ளார்.

நான்கு எம்.எல்.ஏ.க்களில் ஒருவருக்கு 100 கோடி ரூபாயும், மற்ற 3 எம்.எல்.ஏ.க்களுக்கு தலா 50 கோடி ரூபாயும் தருவதாக ஆசை வார்த்தை கூறியிருக்கின்றனர். இதையடுத்து பேரம் பேசப்பட்ட நான்கு எம்.எல்.ஏ.க்களும் முதல்வர் சந்திரசேகர் ராவ் இல்லத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் சந்திரசேகர் ராவிடம் நடந்த சம்பவத்தை விளக்கினர். இவ்விவகாரம் தெலங்கானாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தெலங்கானாவில் 'ஆபரேஷன் லோட்டஸ்' என்ற பெயரில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் எம்.எல்.ஏ.க்களை பேரம் பேசி இழுக்க முயற்சி நடப்பதாக அக்கட்சியின் தலைமை குற்றஞ்சாட்டி உள்ளது.

இதையும் படிக்கலாமே: 'ரூபாய் நோட்டில் அல்லா, இயேசு படத்தையும் சேர்க்கணும்' - கெஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் பதிலடி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com