மழையிலும் வெயிலிலும் மரத்தடியில் தவிக்கும் பள்ளி மாணவர்கள்

மழையிலும் வெயிலிலும் மரத்தடியில் தவிக்கும் பள்ளி மாணவர்கள்
மழையிலும் வெயிலிலும் மரத்தடியில் தவிக்கும் பள்ளி மாணவர்கள்
Published on

273 மாணவர்கள் கொண்ட பள்ளிக்கு 3 மூன்று வகுப்பறைகள் தான் வழங்கப்பட்டுள்ளன.

கர்நாடக மாநிலம் தவனகிரி மாவட்டத்தில் உள்ள சிகதெரி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் மொத்தம் 273 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் மூன்று வகுப்பறையில் மட்டுமே உள்ளன. அதில் 163 மாணவர்கள் அமர்ந்து படித்து வருகின்றனர். இதுதவிர 5ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு அருகாமையில் இருக்கும் கல்யாண மண்டபம் ஒன்றில் படித்து வருகின்றனர். மேலும் 4ஆம் வகுப்பு மாணவர்கள் 57 பேர் மரத்தடி ஒன்றின் கீழ் அமர்ந்து படித்து வருகின்றனர்.

இந்த மாணவர்கள் மழை, வெயில், குளிர் என அனைத்து காலங்களிலும் இந்த மரத்தடியில் தான் பாடம் கற்று வருகின்றனர். கடந்த இரண்டு வருடமாக இந்த நிலை இங்கு உள்ளது. அதுமட்டுமின்றி சாலையில் செல்லும் வண்டிகளின் சத்தம், மக்களின் நடமாட்டம் உள்ளிட்டவை படிக்கும் மாணவர்களுக்கு இடையூறாக உள்ளது. வெட்ட வெளியான காட்சியால் மாணவர்கள் கவனத்துடன் படிக்க முடியவில்லை. சில நேரங்களில் பாம்புகள், நாய்கள் போன்றவை வந்து படிக்கும் மாணவர்களை அச்சுறுத்துவதாகவும் மாணவர்களின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

கல்யாண மண்டபங்களில் படிக்கும் 5ஆம் வகுப்பு மாணவர்களும், திருமண நாட்களில் மரத்தடியில் தான் படிக்கின்றனர். அத்துடன் கல்யாண மண்டபங்களில் பாடம் எடுக்கும் போது, எதிரோலி ஏற்பட்டு பாடத்தை மாணவர்கள் கவனிக்க முடியாத சூழல் உண்டாவதாக ஆசிரியர்களும் தெரிவிக்கின்றனர். அத்துடன் இங்கு கழிப்பறை வசதியும் இல்லை எனவும், இதுதொடர்பாக பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்கின்றனர். இந்தக் கழிப்பறை வசதி இல்லாத சூழல், இங்கு படிக்கும் 135 பெண் குழந்தைகளுக்கு சிரமமாக இருப்பதாகவும் கூறுகின்றனர். இதுதொடர்பாக அந்தத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரிடம் மனு அளித்துள்ளதாகவும், விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெற்றோர்களும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

(Courtersy : The News Minute)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com