ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள வெங்காயம் திருட்டு: விவசாயி புகார்

ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள வெங்காயம் திருட்டு: விவசாயி புகார்
ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள வெங்காயம் திருட்டு: விவசாயி புகார்
Published on


மத்தியப் பிரதேசத்தில் 30,000 ரூபாய் மதிப்புள்ள வெங்காயத்தை மர்ம நபர்கள் அறுவடை செய்து எடுத்துச் சென்று விட்டதாக விவசாயி ஒருவர் புகார் அளித்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம், மண்ட்சோர் மாவட்டம் ரிச்சா பச்சா கிராமத்தைச் சேர்ந்த ஜிதேந்திர குமார் என்ற விவசாயி, தனக்கு சொந்தமான 1.6 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தில் வெங்காயம் சாகுபடி செய்திருந்தார். இந்த வெங்காயத்தை மர்ம நபர்கள் சிலர் இரவு நேரத்தில் புகுந்து அறுவடை செய்து திருடிச் சென்று விட்டதாக காவல்நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். 

திருடப்பட்ட வெங்காயத்தின் மதிப்பு 30,000 ரூபாய் மதிப்புடையது என்று தெரிவித்துள்ளார். புகார் விவரங்களை மதிப்பிடுவதற்காக ஒரு குழு அந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர்களது மதிப்பீட்டிற்குப்பின் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அண்மையில் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெங்காயத்தை ஏற்றிச் சென்ற லாரி மத்தியப்பிரதேசத்தில் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com