கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு பெட்டிமுடி நிலச்சரிவில் சிக்கி 70 பேர் மண்ணுக்குள் புதைந்த கோர சம்பவத்தின் ஒராண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு உயிரிழந்தவர்களின் கல்லறைகளில் உறவினர்கள்,பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மலர் வைளையம் வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே பெட்டிமுடி என்ற மலை கிராமத்தில் ஏராளமான தோட்டத்தொழிலாளர்கள் வசித்து வந்தனர். கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி தென்மேற்கு பருவமழை, கன மழையாக பெய்ததால் அப்பகுதியில் இருந்த மிகப்பெரிய மலைக்குன்றில் நிலச்சரிவு ஏற்பட்டது. மலைக்குன்று ஒன்று சரிந்து விழுந்ததில் தோட்டத் தொழிலாளர்கள் இருந்த தொடர் குடியிருப்புகள் மண்ணிற்குள் புதைந்தன.