உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் மூளை அழற்சிக்கு மேலும் ஒரு குழந்தை இன்று உயிரிழந்தது. நான்கு வயது நிரம்பிய அந்தக் குழந்தைக்கு தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை பலனைத் தரவில்லை என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாகத்தான் உயிரிழப்புகள் நேரிட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், கோரக்பூர் மருத்துவமனைக்கு இன்று காலை கூடுதல் சிலிண்டர்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இதனிடையே, குழந்தைகள் மரணம் குறித்து ஆராய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் நருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அதேவேளையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவும் இன்று கோரக்பூருக்கு வரவிருக்கிறார். கோரக்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறை மற்றும் நோய் தொற்று காரணமாக 5 நாட்களில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளன.