உரிய நடவடிக்கை இல்லையெனில்.. 2033ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கு காத்திருக்கும் இணையவழி தாக்குதல்!

உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் 2033ஆம் ஆண்டுக்குள் இந்தியா ஒரு லட்சம் கோடி இணையவழி தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும் என்ற அதிர்ச்சி தரும் ஆய்வுகள் வெளியாகியுள்ளன.
இணையவழி தாக்குதல்
இணையவழி தாக்குதல்முகநூல்
Published on

உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் 2033ஆம் ஆண்டுக்குள் இந்தியா ஒரு லட்சம் கோடி இணையவழி தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும் என்ற அதிர்ச்சி தரும் ஆய்வுகள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக, பிரஹார் என்ற அமைப்பு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், எய்ம்ஸ் மற்றும் விமானநிலையங்கள் மீது ரகசிய இணைய நிறுவனங்களால் நடத்தப்படும் சைபர் தாக்குதல்கள், இந்தியாவில் டிஜிட்டல் சுற்றுச்சூழலின் விரைவான விரிவாக்கத்தின் அபாயங்களுக்கு எடுத்துக்காட்டு என தெரிவித்துள்ளது.

2023ஆம் ஆண்டில் நாடு 7 கோடியே 90 லட்சம் இணையவழி தாக்குதல்களை எதிர்கொண்டது. இது, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 15 சதவிகிதம் அதிகம் என பிரஹார் தெரிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 500க்கும் அதிகமான சைபர் குற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சைபர் கிரிமினல்களால் அதிகளவில் குறிவைக்கப்படும் துறைகளில் வலுவான இணைய பாதுகாப்பு தேவை என்பதை இந்த ஆய்வுகள் உணர்த்துவதாக பிரஹார் தெரிவித்துள்ளது.

இணையவழி தாக்குதல்
பண்டிகை காலத்தில் உயர்ந்த சமையல் எண்ணெய் விலை.. பலகாரம் செய்வோருக்கு சுமை கூடும் நிலை?

இந்தியர்கள் இந்தாண்டில் இதுவரை ஆயிரத்து 750 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இழந்திருப்பது தேசிய சைபர் கிரைம் இணைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com