”ஊடகங்களுக்கு ஒரு முகம், எங்களுக்கு ஒரு முகம்”.. சசிதரூர் மீது காங்கிரஸ் காட்டம்!

”ஊடகங்களுக்கு ஒரு முகம், எங்களுக்கு ஒரு முகம்”.. சசிதரூர் மீது காங்கிரஸ் காட்டம்!
”ஊடகங்களுக்கு ஒரு முகம், எங்களுக்கு ஒரு முகம்”.. சசிதரூர் மீது காங்கிரஸ் காட்டம்!
Published on

”சசி தரூரின் கோரிக்கைகள் அனைத்தையும் நாங்கள் ஏற்றுக்கொண்டோம். ஆனால் நாங்கள் அவருக்கு எதிராக சதி செய்வதாக ஊடகங்களுக்குச் சொல்கிறார். எங்களிடம் ஒரு முகமும், ஊடகத்திடம் ஒரு முகமுமாக சசி தரூர் செயல்படுகிறார்” என காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்திரி தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் நடத்தப்பட்டதில் முறைக்கேடுகள் நடந்ததாக, வாக்கு எண்ணிக்கை நடைப்பெற்ற போது சசி தரூர் கட்சியின் மத்திய தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்திரிக்கு கடிதம் அனுப்பினார். கடிதம் அனுப்பிய சில நிமிடங்களிலேயே சசி தரூர் ஆதரவாளர், ’நாங்கள் அளித்த புகாரை மதுசூதன் மிஸ்திரி விசாரிப்பதாக கூறி எங்களுக்கு உரிய விளக்கத்தை அளித்துள்ளது. அதை நாங்கள் ஏற்றுகொண்டுள்ளோம். எனவே வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற சம்மதம் தெரிவித்துள்ளோம்’ என கூறினார்.

அதன்பின்பு, இந்த தேர்தல் முறைகேடு விவகாரம் அப்படியே இருக்க, அடுத்த ஒருமணி நேரத்தில் மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றதாக அறிவிப்பு வெளியானது. இதனை தொடர்ந்து, வெற்ற பெற்ற மல்லிகார்ஜுன கார்கேவுக்கு, சசி தரூர் வாழ்த்து தெரிவித்ததோடு, சோனியா காந்திக்கு கட்சியினர் கடமைப்பட்டு இருப்பதாகவும், தேர்தலுக்கு முழு ஒத்துழைப்பு ராகுல்காந்தி கொடுத்ததாகவும் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், ’உத்திரபிரதேசத்தில் தேர்தல் முறைகேடுகள் குறித்த தனக்கு சசி தரூர் அனுப்பிய கடிதத்தில் உள்ள கேள்விகளுக்கு நாங்கள் அளித்த பதில் திருப்தி அளிப்பதாக தரூர் தன்னிடம் கூறினார். ஆனால், ஊடகங்களுக்கு முன்பு குற்றச்சாட்டுகள் வைக்கிறார். உங்களுக்கு என்னிடம் ஒரு முகம், ஊடகத்திடம் ஒரு முகம் இருப்பதற்கு நான் வருந்துகிறேன். மேலும், அவர் எழுத்திய கடித்ததில் குறிப்பிட்டிருந்த தகவல்களுக்கு எந்த அடிப்படையும் இல்லை. வாக்குச்சாவடிக்குள் அங்கீகரிக்கப்படாத நபர் யாரும் நுழையவில்லை. அவர் எனக்கு எழுதி கடித்தத்தை பொது வெளியில் பகிரங்கப்படுத்துவது சரியாக இருக்காது‘’ என காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்திரி காட்டமாக கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து, மல்லிகார்ஜுன கார்கே வெற்றிக்கு, சசி தரூர் வாழ்த்து தெரிவித்தது எல்லாம் கண் துடைப்பு தான். உண்மையில் அவருக்கு கார்கேவின் வெற்றியை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால் தான் மாற்றி மாற்றி பேசுகிறார் என கார்கேவின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com