வழக்கமாக ஓணம் பண்டிகையின்போது கேரளாவில் மலர் விற்பனை அமோகமாக இருக்கும் நிலையில் இந்தாண்டு கொரோனா காரணமாக அவ்வர்த்தகம் களையிழந்துள்ளது.
கொரோனா தொற்று கேரளாவில் கட்டுக்குள் வராத நிலையில் அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. இதனால் சந்தைகளுக்கு மலர் வரத்து வெகுவாக குறைந்துள்ளதுடன் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. மலர் விற்பனைக் கடைகளில் வழக்கமாக கூட்டநெரிசல் நிலவும் நிலையில், இம்முறை நிலைமை தலைகீழாக இருக்கிறது. மலையாளிகளின் பிரதான பண்டிகையான ஓணம் இந்தாண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது